வவுனியாவில் இன்று காலை 9 மணியளவில் தினச்சந்தைப் பகுதியில் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்த மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் திரு.ரி.கே. இராஜலிங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சுந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், உள்ளுர் விளை பொருள் விற்பனையாளர் சங்கத் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், தினச்சந்தை வியாபார நிலைய விற்பனையாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சுடரெற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.