பாலி குண்டுவெடிப்பு குற்றவாளி விடுதலை - பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய மக்கள் கடும் அதிர்ச்சி ஏமாற்றம்

By Rajeeban

08 Dec, 2022 | 12:25 PM
image

பாலி குண்டுவெடிப்பில் முக்கியகுற்றவாளி  விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறித்து பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய மக்கள் பெரும் ஏமாற்றம் வெளியிட்டுள்ளனர்.

2002 ம் ஆண்டு பாலியின் இரவுவிடுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 88 அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர்  என அல்ஹைடா ஆதரவு ஜெமா இஸ்லாமியாவின் உமார் பட்டேக் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் பல வருடங்கள் தலைமறைவாக இருந்த இவர் பின்னர் கைதுசெய்யப்பட்டார் இவருக்கு 2012 இல் 20 வருட சிறைத்தண்டனைவழங்கப்பட்டது.

இந்த நிலையில் குண்டுவெடிப்பிற்கான குண்டுகளை தயார் செய்த உமார் பட்டேக் புதன்கிழமை இந்தோனேசிய சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டுள்ளார்

அவர் தீவிரவாத மனோநிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனினும் இந்த விடுதலை பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்கள் மத்தியில் கடும்  ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அவரின் நல்ல செயல்களை சுட்டிக்காட்டியுள்ள இந்தோனேசிய அதிகாரிகள் அவரால் தற்போது எந்த ஆபத்தும் இல்லை இதனால் அவரை விடுதலை செய்யலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் பாலி தாக்குதலில் தனது ஐந்து நண்பர்களை இழந்த ஜான் லக்ஜைன்ஸ்கி  என்பவர் தான் இது குறித்து அதிர்ச்சியும் கவலையும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எங்களில் பலர் நாங்கள் இழந்தவற்றை மீளப்பெறப்போவதில்லை ஆனால் அந்த நபருக்கு அவரது வாழ்க்கை மீள கிடைக்கின்றது என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

இது பயங்கரமானது தவறு   என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த தாக்குதல் எனது வாழ்க்கையை முற்றாக மாற்றியது என அன்ரூசாபி தெரிவித்துள்ளார்.

இந்த விடுதலை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது நான் பாதுகாப்பாக உணரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் இன்னமும் வெறுப்புணர்வு உடையவர்களாக விளங்கும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் குண்டுதாக்குதல் முயற்சியில் ஈடுபடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பட்டேக் திருந்திவிட்டார் என்பதை எவரும் நம்புவதற்கு தயாரில்லை என லக்ஜைன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நான் அவரை சிறையில் பார்த்திருக்கின்றேன் நெருக்கமாக பார்த்திருக்கின்றேன் அவர் திருந்திவிட்டார் போல எனக்கு தோன்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பட்டேக்கின் விடுதலைக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய அரசாங்கம்   அவரை தொடர்ந்து கண்காணிக்குமாறு இந்தோனேசியாவிற்கு அழுத்தம் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரியாவில் பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்த கைக்குழந்தை...

2023-02-06 22:00:36
news-image

இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்ட உறவுகளை மீட்பதற்காக...

2023-02-06 21:19:37
news-image

மீட்புபணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை துருக்கியை தாக்கிய இரண்டாவது...

2023-02-06 20:38:26
news-image

சிரியா துருக்கியில் 12 மணித்தியாலங்களின் பின்னர்...

2023-02-06 19:58:52
news-image

துருக்கி பூகம்பத்தினால் துருக்கி, சிரியாவில் 1,470...

2023-02-06 16:48:57
news-image

எனது குடும்பம் முழுவதும் இறந்துவிடும் என...

2023-02-06 16:11:35
news-image

பலஸ்தீனியர்கள் ஐவர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டனர்

2023-02-06 15:15:12
news-image

சீனாவை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸில் அமெரிக்க பாதுகாப்புத்...

2023-02-06 14:55:49
news-image

'காஷ்மீர் ஒற்றுமை தினம்' இந்தியாவே இலக்கு

2023-02-06 15:28:47
news-image

பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 பேர்...

2023-02-06 13:37:11
news-image

அதானி விவகாரம் | நாடு தழுவிய...

2023-02-06 12:53:10
news-image

பிரான்ஸில் வீடொன்றில் ஏற்பட்ட  தீயினால் பெண்ணொருவரும்...

2023-02-06 12:53:14