கல்கமுவ, மஹகல்கடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

வேன் மற்றும் கெப் வண்டி ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் (48) வேனின் சாரதி என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்த கெப் வண்டி சாரதி மற்றும் உதவியாளர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.