புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரபணு அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்காததினால் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஆண்டு ஜனவரி 11ஆம் திகதி ஒத்திவைத்தும் சந்தேக நபர்கள் 10 பேரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும்  ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.