கொழும்பு துறைமுக உணவகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த தீ விபத்து இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உடனடியாக செயற்பட்ட துறைமுக தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர் 38 வயதுடையவர் என்பதுடன், காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.