யோகி பாபு நடிக்கும் 'மலை' படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

08 Dec, 2022 | 11:04 AM
image

தமிழ் சினிமாவின் 'ஒன் லைன் பஞ்ச் ஸ்பெஷலிஸ்ட்' யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மலை' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் பா. ரஞ்சித் தன்னுடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

அறிமுக இயக்குநர் ஐ.பி. முருகேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'மலை'. இதில் நடிகை லட்சுமி மேனன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் யோகி பாபு அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் காளி வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார்.

மலைவாழ் மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர் கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சௌந்தர்யா இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் யோகி பாபுவின் தோற்றமும், மருத்துவராக நடித்திருக்கும் லட்சுமிமேனனின் தோற்றமும், அதன் பின்னணியில் மலை ஒன்றும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

'' மலையும் மலை சார்ந்த பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் நாளாந்தம் சந்திக்கும் சிக்கலை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறோம்.

இப்படத்தின்  தலைப்பிற்கு ஏற்ற வகையில் மலை ஒரு கதாபாத்திரமாக திரைக்கதையில் இடம் பிடித்திருக்கிறது. மாநகரப் பகுதியிலிருந்து மலை கிராம பகுதிக்கு வைத்திய சேவை செய்ய வரும் லட்சுமி மேனனுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் வித்தியாசமான வேடத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியிருக்கிறது'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37