(ஏ.என்.ஐ)
சின்ஜியாங்கில் வாழும் உய்குர் முஸ்லிம் மக்கள் மீது சீன அரசாங்கத்தின் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை' வெளிப்படுத்தும் வகையில் சீனாவின் பெரிய அளவிலான அடக்குமுறைக்கு எதிராக உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அவ்வாறானதொரு போரட்டம் டோக்கியோவில் இடம்பெற்ற நிலையில் அந்த ஆர்ப்பாட்டங்கள் ஆனது சீனாவின் சின்ஜியாங்கில் உய்குர் மக்கள் படும் துன்பங்களை மௌனமாக எடுத்துக்காட்டுகின்றன.
சின்ஜியாங்கின் தலைநகர் உரும்கியில் அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கொல்லப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட உய்குர்களுக்கும் ஆர்வலர்கள் இதன்போது அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கொவிட் கட்டுப்பாடுகள் வெளியே எந்த நடமாட்டத்தையும் அனுமதிக்காததால் உய்குர்களால் தங்கள் குடியிருப்பில் ஏற்பட்ட தீயிலிருந்து தப்பிக்க முடியவில்லை என இதன் போது உரயாற்றிய ஜப்பான் உய்குர் யூனியன் தலைவர் குறிப்பிட்டார்.
சீனாவின் பூஜ்ஜிய கொவிட் மற்றும் இன எதிர்ப்பு கொள்கைகள் - விதிவிலக்காக கடுமையான மற்றும் அடக்குமுறை - சீனாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள உய்குர் சிறுபான்மையினரை மேலும் பயமுறுத்துவது எப்படி என்பதை எதிர்ப்பாளர்கள் வழிப்போக்கர்களிடம் சுட்டிக்காட்டியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 24 அன்று உரும்கி தீ விபத்து 15வது மாடியில் உள்ள மின்கசிவால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. புகை மற்றும் தீ பல தளங்களுக்கு பரவியதால் தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நாற்பது பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM