(நெவில் அன்தனி)
கார்லோஸ் ப்றத்வெய்ட்டியின் 4 விக்கெட் குவியல், கமிந்து மெண்டிஸின் பொறுப்பான துடுப்பாட்டம் என்பன கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான லங்கா பிறீமியர் லீக் போட்டியில் கண்டி பெல்கன்ஸ் அணி 5 விக்கெட்களால் வெற்றிபெறுவதற்கு வழிவகுத்தன.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் புதன்கிழமை (07) இரவு நடைபெற்ற அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் க்ளடியேட்டர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது.
பவர்ப்ளே ஓவர்கள் நிறைவில் கோல் க்ளடியேட்டர்ஸ் 5 விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கெண்டி ஃபெல்கன்ஸ் 3 பிடிகளைத் தவறவிட்டதால் கோல் க்ளடியேட்டர்ஸ் ஓரளவு நல்ல நிலையை அடைந்தது.
வெஸ்லி கல்லூரியின் முன்னாள் வீரர் மொவின் சுபசிங்க, பாகிஸ்தானின் முன்னாள் வீரர் இமாத் வசிம் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
மொவின் சுபசிங்க 40 ஓட்டங்களையும் இமாத் வசிம் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களைவிட அணித் தலைவர் குசல் மெண்டிஸ் (14), நுவனிது பெர்னாண்டோ (13) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
கோல் க்ளடியேட்டர்ஸ் பந்துவீச்சில் கார்லோஸ் ப்றத்வெய்ட் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 14 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஐக்கிய அரபு இராச்சிய வீரர் ஸஹூர் கான் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கலம்போ ஸ்டார் அணிக்கு எதிரான போட்டியில் ஹெட்-ட்ரிக் அடங்கலாக 4 விக்கெட்களைக் கைப்பற்றி பந்துவீச்சில் அசத்தியிருந்த அணித் தலைவர் வனிந்து ஹசரங்க டி சில்வா, நேற்றைய போட்டியில் 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரமே வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி ஃபெல்கன்ஸ் 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
முன்வரிசை வீரர்கள் மூவரும் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தியதால் கண்டி ஃபெல்கன்ஸ் இலகுவாக வெற்றிபெற்றது.
பெத்தும் நிஸ்ஸன்க (22), அண்ட்றே ப்ளெச்சர் (20) ஆகிய இருவரும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி 3.4 ஓவர்களில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன.
எனினும் கமிந்து மெண்டிஸ் மிகவும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களைப் பெற்று தனது அணிக்கு வெற்றி இலக்கை அண்மிக்க உதவினார்.
அவர் 5ஆவதாக ஆட்டமிழந்த பின்னர் ப்றத்வெய்ட்டும் வனிந்து ஹசரங்கவும் வெற்றிக்கு தேவைப்பட்ட எஞ்சிய ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் நுவன் ப்ரதீப் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM