பெரு ஜனாதிபதி பதவி நீக்கப்பட்டு கைதானார்: முதல் பெண் ஜனாதிபதியாக டீனா பதவி‍யேற்றார்

Published By: Sethu

08 Dec, 2022 | 09:51 AM
image

பெரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த பெட்ரோ கஸ்ட்டிலோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை மூலம் பதவிநீக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதையடுத்து, பெருவின் புதிய ஜனாதிபதியாக டீனா போலார்ட்டே பதவியேற்றுள்ளார்.  அந்நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் அமெரிக்க நாடான பெருவின்  ஜனாபதியாக கடந்த வருடம்  ஜூலை மாதம் பெட்ரோ கஸ்டிலோ பதவியேற்றிருந்தார்.

பெருவின் பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாக ஜனாதிபதி கஸ்டில்லோ அறிவித்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அயல்நாடுகளும் குரல்கொடுத்திருந்தன. 

 நேற்று புதன்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்திய ஜனாதிபதி  பெட்ரோ கஸ்டில்லோ, நாடாளுமன்றத்தை கலைப்பதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பெட்ரோ கஸ்டில்லாவுககு எதிராக நம்பிக்கையில்லா பிரேரண கொண்டுவரப்பட்டது. வாக்களித்த 130 எம்.பிகளில்   101 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். 6 பேர் எதிராக வாக்களித்தனர். 

அதையடுத்து, ஜனாதிபதி பதவியிலிருந்த நீக்கப்பட்ட பெட்‍ரோ கஸ்டில்லோ கைது செய்யப்பட்டார். 

பின்னர், உப ஜனாதிபதியாக விளங்கிய டீனா போலார்ட்டே ஜனாதிபதியாக பதவியேற்றார். 

Photos: AFP

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் கைவிடப்பட்ட நிலையில் 05 ஒராங்குட்டான்...

2026-09-09 17:29:09
news-image

மலேசியாவில் ஹெலிகொப்டர் விபத்து: வைத்தியர் உட்பட...

2026-09-09 14:34:06
news-image

“சிங்க நெபுலா”வின் புதிய தோற்றத்தை வெளியிட்டது...

2026-09-09 12:21:47
news-image

பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் கோளாறு:...

2026-09-09 12:22:31
news-image

பெண்ணின் வயிற்றிலிருந்து 13 பேனாக்கள், மெழுகுவர்த்தி...

2026-09-09 11:59:59
news-image

ரஷ்ய மலையில் ஏற்பட்ட பனிச்சரிவு ;...

2026-09-09 11:14:26
news-image

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா...

2026-09-09 11:16:36
news-image

வழமைக்கு திரும்பியுள்ளது ஈபிள் கோபுரம்

2026-09-09 10:55:22
news-image

நேபாளம் அருகே 5.3 ரிச்டர் அளவு...

2026-09-09 14:21:18
news-image

6G தொழில்நுட்பம்: அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய...

2026-09-08 12:46:35
news-image

‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என...

2026-09-08 12:29:15
news-image

உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியா...

2026-09-08 11:05:50