(நெவில் அன்தனி)
தம்புள்ள ஓரா அணிக்கு எதிராக ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (06) பிற்பகல் நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் இருபது 20 முதலாம் சுற்று போட்டியில் ஜெவ்னா கிங்ஸ் 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.
மஹீஷ் தீக்ஷன, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் அரைச் சதங்களுடன் இட்டுக்கொடுத்த சிறந்த ஆரம்பம் எனபன ஜெவ்னா கிங்ஸின் வெற்றியை இலகுபடுத்தின.
அத்துடன் திங்கட்கிழமை ஆரம்பப் போட்டியில் கோல் க்ளடியேட்டர்ஸை 29 ஓட்டங்களால் வெற்றிகொண்ட ஜெவ்னா கிங்ஸ் இன்று தனது 2ஆவது வெற்றியை ஈட்டியது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தம்புள்ள ஓரா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்தின் கென்ட் பிராந்திய அணி வீரர் ஜோர்டன் கொக்ஸ், 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஷெவொன் டெனியல் ஆகிய இருவரும் 46 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து மிகச் சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஜோர்டன் கொக்ஸ் 22 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 43 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததுடன் தம்புள்ள ஓரா அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டன.
7.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 63 ஓட்டங்களைப் பெற்ற தம்புள்ள ஓரா, 12.2 ஓவர்களில் 8 விக்கெட்களுக்கு 68 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
கொக்ஸை விட ஷெவொன் டெனியல் (19), பானுக்க ராஜபக்ஷ (18), போல் வன் மீக்கெரென் (11), ரமேஷ் மெண்டிஸ் (10) ஆகியோரே 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.
ஜெவ்னா கிங்ஸ் பந்துவீச்சில் மீண்டும் திறமையை வெளிப்படுத்திய யாழ். வீரர் வியாஸ்காந்த் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அவரைவிட மஹீஷ் தீக்ஷன 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேம்ஸ் ஃபுல்லர் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
122 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ், 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கினர்.
சதீர சமரவிக்ரம 44 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அவிஷ்க பெர்னாண்டோ 51 ஓட்டங்களைப் பெற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM