(எம்.ஆர்.எம்.வசீம்)
எதிர்காலத்தை இலக்குவைத்து மிகவும் சவாலுக்கு மத்தியில் ஜனாதிபதி முன்வைத்திருக்கும் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள் முன்வரவேண்டும்.
அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில்புதன்கிழமை (டிச. 7) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற இருக்கின்றது. என்றாலும், இதில் பிரதான எதிர்க்கட்சி இதற்கு ஆதரவாக வாக்களிப்பதா, எதிர்த்து வாக்களிப்பதா அல்லது வாக்களிப்பில் இருந்து தவிர்ந்துகொள்வதா என எந்த நிலைப்பாட்டையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.
வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு எந்த மோசமான யோசனைகளும் அதில் இல்லை. என்றாலும், சம்பிரதாய அடிப்படையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த வரவு - செலவுத் திட்டம் அமையாமல் தூரநோக்குடன் நாட்டை கட்டியெழுப்பும் திட்டங்களே இதில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
எதிர்காலத்தை இலக்குவைத்தே ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்திருக்கின்றார்.
வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. நாடு வீழ்ச்சியடைந்து, பொருளாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்த நாட்டையே ரணில் விக்ரமசிங்க பொறுப்பெடுத்திருந்தார்.
அவர் மேற்கொண்டிருந்த நடவடிக்கையால் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மக்கள் எரிபொருள், சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு வரிசையில் இருக்கவேண்டிய நிலையே இருந்தது. அந்த நிலையை ஜனாதிபதி இல்லாமலாக்கி இருக்கின்றார்.
பொருட்களின் விலை படிப்படியாக குறைய ஆரம்பித்திருக்கின்றது. அதேபோன்று சுற்றுலா பிரயாணிகளின் வருகை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது அவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பணவீக்கம் குறைந்து வருகின்றது.
கொவிட் காலத்துக்கு முன்னர் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியன் வரை இருந்தது. அடுத்த வருடமாகும்போது அந்த இலக்கை எமக்கு அடைந்துகொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்வைத்திருக்கும் யோசனைகளை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றார்களே தவிர, முன்னேற்றகரமான மாற்று யோசனைகள் எதனையும் இதுவரை முன்வைக்கவில்லை.
எதிர்க்கட்சி என்ற வகையில் அவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது வழமையானது. என்றாலும், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலையில் நாட்டை கட்டியெழுப்ப தேவையான ஆதரவை வழங்கவேண்டும்.
ஆனால், இவர்கள் நாடு தொடர்பில் சிந்திக்காமல் தனிப்பட்ட அரசியலையே செய்து வருகின்றனர். எதிர்க்கட்சியின் கடமையை நிறைவேற்ற அவர்கள் தவறியிருக்கின்றனர்.
எனவே, அரசியல் பேதங்களை மறந்து நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றே ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
அதனால் மிகவும் சவாலுக்கு மத்தியில் ஜனாதிபதி முன்வைத்திருக்கும் இந்த வரவு - செலவுத் திட்டத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றே நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM