தடை செய்யப்பட வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அல்ல. இனவாதத்தை தாக்கும் உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமயவே முதலில் தடை செய்ய வேண்டும் என சுகாதார துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இங்கு ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாகவும் அவ்வாறு கூட்டமைப்பை தடை செய்ய முடியுமா? எனவும்    கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர்  ராஜித சேனாரத்தன குறிப்பிடுகையில்;

தடை செய்வதாயின் முதலில் பிவித்திரு ஹெல உறுமயவே தடை செய்ய வேண்டும். நாட்டில் இனவாதத்தை கக்கும் கட்சியே அதுவாகும். அதனை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டியதில்லை என்றார்.