கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதனையின்போது சிக்கிக் கொண்ட 124 பேர்!

Published By: Digital Desk 3

07 Dec, 2022 | 01:27 PM
image

கொழும்பு கோட்டை  ரயில்  நிலையத்தில் நேற்று (06) காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட  விசேட பயணச்சீட்டு சோதனையின்போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை ரயில்  நிலைய ஊழியர்கள் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டதாக  ரயில்வேயின் வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

இதன்போது  கைது செய்யப்பட்ட 78 பேர் உரிய அபராதத் தொகையை உடனடியாகச்  செலுத்தியுள்ளனர். ஏனைய 46 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதத் தொகை 39,840 ரூபா எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பயணச்சீட்டு  இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடமிருந்து அறவிடப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 இலட்சத்து 78,610 ரூபா என தெரிவிக்கப்படடள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15