யாழ்.பல்கலை சூழலில் கூடும் இளைஞர் கூட்டம் மாணவிகளுடன் சேட்டை ; சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு!

Published By: Digital Desk 3

07 Dec, 2022 | 12:33 PM
image

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளுடன் வீதிகளில் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விடுதிகள் மற்றும் வாடகை அறைகளில் தங்கியுள்ள மாணவிகள், பல்கலைக்கழகத்தில் தமது கற்றல் செயற்பாடுகளை முடித்துக்கொண்டு தமது தங்குமிடத்திற்கு திரும்பும் வேளைகளில் பல்கலையை சூழவுள்ள வீதிகளில் அநாவசியமாக கூடி நிற்கும் இளைஞர்கள் கும்பல்கள் மாணவிகளை இலக்கு வைத்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மாணவிகளை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசுதல் , சைகைகளை காட்டுவது, தமது அந்தரங்க உறுப்புக்களை காட்டுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது தொடர்பில் அண்மையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் 300 பேர் கையொப்பம் இட்டு , பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு முறையிட்டு இருந்தனர். 

பல்கலைக்கழகத்திற்கு வெளியே இவ்வாறான செயற்பாடுகள் நடப்பதனால் , மாணவிகளால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளத்துடன் ,பல்கலைக்கழக சூழலில் சிவில் உடைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07