தமிழகத்தில் கோர விபத்து : கோவிலுக்குச் சென்று திரும்பிய 6 பேர் பலி, 5 பேர் படுகாயம்..!

Published By: Digital Desk 3

07 Dec, 2022 | 12:25 PM
image

தமிழகத்தில், லொறி மீது  வேன் மோதிய விபத்தில், திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

தமிழகத்தின், செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பொழிச்சலூர் ஞானாம்பிகை தெரு பகுதியைச் சேர்ந்த 15 பேர், வேன் ஒன்றில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சென்றனர். அங்கு, சுவாமி தரிசனம் முடித்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று (07) அதிகாலை, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜானகிபுரம் என்ற இடத்தில்  வேன் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற ஈச்சர் லொறி மீது மோதியது.

அப்போது, பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த கனகர வாகனம் ஒன்று  வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில், இரண்டு வாகனங்களுக்கும் இடையே சிக்கிய வேன், அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த சந்திரசேகர் (70), தாமோதரன் (28), சசிகுமார் (35), சேகர் (55), ஏழுமலை (65), கோகுல் (33) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், ராமமூர்த்தி (35), சதீஷ்குமார் (27), ரவி (26), சேகர் (37), அய்யனார் (34) ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்து, இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இந்த விபத்து குறித்து, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டுநர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரும் மீட்புப் படையினரும், இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், உயிரிழந்த 6 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17