12 வயதுக்குட்பட்ட சிறார்களிடம் அதிகரிக்கும் இரத்த அழுத்தம்

Published By: Nanthini

07 Dec, 2022 | 12:58 PM
image

லகளவில் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இரத்த அழுத்த பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இதனால் மருத்துவ நிபுணர்கள், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது தொடர்பான முழுமையான புரிதலுடன் கூடிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் அல்லது ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்கள்.

பொதுவாக கடந்த தசாப்தங்களில் இரத்த அழுத்த பாதிப்பு மற்றும் உயர் குருதி அழுத்த பாதிப்பு என்பது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கோ அல்லது 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கோ தான் ஏற்படும். ஆனால், தற்போது உணவு பழக்கவழக்கம் மற்றும் வாழ்வியல் நடைமுறை மாற்றங்களினால் இரத்த அழுத்த பாதிப்பு என்பது மிக இள வயதிலேயே ஏற்படுகிறது.

எம்முடைய இரத்த குழாய்கள், இரத்த ஓட்டத்துக்கு ஏற்ற வகையில் நெகிழ்வுத் தன்மையுடன் அமைய பெற்றிருக்கும். அதிலும் குறிப்பாக உடல் வளர்ச்சியடையும் 19 வயது வரை உள்ளவர்களுக்கு, இரத்த நாளங்களில் எத்தகைய அடைப்பு பாதிப்பும் ஏற்படுவதில்லை. 

மேலும், இவர்களின் இரத்த ஓட்டத்துக்கு ஏற்ப இரத்த குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையும் இயல்பாகவே இருக்கும். இதனால் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதில்லை. 

ஆனால், தற்போதைய சூழலில் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள், பதப்படுத்தப்பட்டு, பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருட்களை பெற்றோர்கள் அனுமதியுடனும், பெற்றோர்களின் அனுமதியில்லாமலும் அதிகமாக சாப்பிடுகிறார்கள். 

அத்தகைய உணவுப் பொருட்களில் வெள்ளை சர்க்கரையும், வெள்ளை உப்பும் இயல்பான அளவை விட கூடுதலாக இருக்கிறது. இதன் காரணமாக இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உருவாகிறது.

மேலும், கடந்த தசாப்தங்களை போல அல்லாமல், தற்போதைய பிள்ளைகள் கையடக்க திரை, சின்னத்திரை, மடிக்கணினி திரை, டிஜிட்டல் திரை என ஏதேனும் ஒரு திரையை பார்வையிட்டுக்கொண்டிருக்கும் நேரம் அதிகம். 

உடல் உழைப்பு என்பது குறைவு. இதன் காரணமாகவும் இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையில் பாரிய பாதிப்பு உண்டாகி, இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, 12 மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றால், அவர்களது பெற்றோர்கள் இது குறித்த முழுமையான விழிப்புணர்வை பெற்று, அதனை அவர்களது பிள்ளைகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில், பிள்ளைகள் திடீரென்று உணவு பழக்கவழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஒப்புக்கொள்ள மாட்டார்கள். 

மேலும், அவர்களுக்கு ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை உண்பதை விட, இயற்கையான சத்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். 

மேலும், அது தொடர்பாக தொடர்ச்சியாக நேர்நிலையான தகவல்களை பிள்ளைகளிடத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனை செய்ய தவறினால், 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இரத்த அழுத்த பாதிப்பு உண்டாகும். இதனால்  நாளடைவில் பிள்ளைகளின் இதயம், சிறுநீரகம், மூளைப் பகுதி மற்றும் இரத்த நாள பகுதிகள் போன்றவை பாதிக்கப்பட்டு, உயிரிழப்புக்கு பாரிய அச்சுறுத்தல் உண்டாகும்.

- டொக்டர் சிவபிரகாஷ்

(தொகுப்பு: அனுஷா)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04