(ம .குமணன்)

மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்களை மாலை 5  மணியளவில் பனிக்கன்குளம் பகுதியில்  வீதிகடமையில் ஈடுபட்டிருந்த மாங்குளம் பொலிஸ்நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.வி பிறேமசிறி உள்ளிட்ட குழுவினர் மறித்து சோதனையிட்டபோது மேற்படி நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடமிருந்து  30கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவைச் சேர்ந்த  மேற்படி இளைஞர்கள் இருவரும் நாளை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மாங்குளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.