மண வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய ஹன்சிகா

By Nanthini

07 Dec, 2022 | 12:31 PM
image

டிகை ஹன்சிகா மோத்வானி தொழிலதிபரும் குடும்ப நண்பருமான சோகைல் கதூரியாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 4ஆம் திகதி பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார். 

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.

இவருக்கும் தொழிலதிபர் சோகைல் கதூரியா என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணம், 450 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தில் உள்ள முண்டோடா கோட்டையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இவர்களது திருமண நிகழ்வில் மணமகன், மணமகள் வீட்டாரின் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே பங்குபற்றினர்.

இதைத் தொடர்ந்து நடிகை ஹன்சிகா மோத்வானி, தன் திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இவர்களுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களின் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே ஹன்சிகா, தேனிலவுக்காக அடுத்த மாதம் வெளிநாடொன்றுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அத்துடன் தேனிலவுக்கு சென்று திரும்பிய பிறகு ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right