(நெவில் அன்தனி)
லுசெய்ல் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (06) இரவு நடைபெற்ற 2ஆம் சுற்று போட்டியில் சுவிட்சர்லாந்தை 6 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றிகொண்ட போர்த்துக்கல், பீபா 2022 உலகக் கிண்ண கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
ரொனால்டோவுக்குப் பதிலாக இப் போட்டியில் முதல் பதினொருவரில் இணைக்கப்பட்ட கொன்சாலோ ரமோஸ் புகுத்திய ஹெட்-ட்ரிக் கோல்கள் போர்த்துக்கல்லின் வெற்றியில் பிரதான பங்காற்றியது.
உலகக் கிண்ண கால் இறுதியில் விளையாடுவதற்கு மூன்றாவது தடவையாக போர்த்துக்கல் தகுதி பெற்றுள்ளது. கடந்த 5 அத்தியாயங்களில் தொடர்ச்சியாக நொக்-அவுட் சுற்றில் தோல்விகளைத் தழுவி வந்த போர்த்துக்கல்லுக்கு இந்த வெற்றி பெரு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதற்கு முன்னர் 1966இலும் 2006இலும் போர்த்துக்கல் கால் இறுதிகளில் விளையாடி இருந்தது.
இதேவேளை, ஸ்பெய்னுடனான பரபரப்பான போட்டியில் பெனல்டி (3 - 1) முறையில் வெற்றி கொண்ட மொரோக்கோவை கால் இறுதியில் போர்த்துக்கல் எதிர்த்தாடவுள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஈட்டப்பட்ட 6 - 1 என்ற வெற்றியானது உலகக் கிண்ண நொக்-அவுட் சுற்றில் போர்த்துக்கல் ஈட்டிய மிகப் பெரிய வெற்றியாகும். அத்துடன் நொக்-அவுட் சுற்றில் 6 கோல்களை போர்த்துக்கல் போட்டது இதுவே முதல் தடவையாகும்.
வழமையான அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை நீக்கிய பயிற்றுநர் பெர்னாண்டோ சன்டோஸ், அவருக்கு பதிலாக 21 வயதான கொன்சாலோ ரமோசை சுவிட்சர்லாந்துடனான போட்டியில் முதல் பதினொருவர் அணியில் சேர்த்தார்.
அப் போட்டியில் அற்புதமான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய ரமோஸ் ஹெட்-ட்ரிக் முறையில் கோள்களைப் புகுத்தி போர்த்துக்கல்லின் வெற்றியில் பிரதான பங்காற்றினார்.
தென் கொரியாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியின் 65ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மாற்றியபோது அவர் வெளிக்காட்டிய சைகைகள் குறித்து பயிற்றுநர் சன்டோஸ் கடும் அதிருப்தி அடைந்திருந்தார். இதன் காரணமாகவே அவருக்குப் பதிலாக ரமோசை நொக்-அவுட் போட்டியில் பயிற்றுர் இணைத்துக்கொண்டார்.
2008இலிருந்து தொடர்ச்சியாக 30 பிரதான கால்பந்தாட்டப் போட்டிகளில் முதல் பதினொருவரில் அணியில் இடம்பெற்ற ரொனால்டோவுக்கு 31ஆவது போட்டியில் 73ஆவது நிமிடத்தல் மாற்றுவீரராக களம் புகும்வரை வெறும் பார்வையாளராக அமர்ந்திருக்க நேரிட்டது.
ரொனால்டோ இல்லாததை ஒரு குறையாக கருதாத போர்த்துக்கல் வீரர்கள் ஆரம்பம் முதல் கடைசிவரை திறமையாக விளையாடி தமது அணிக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.
போட்டியின் 17ஆவது நிமிடத்தில் யோவா பீலிக்ஸ் பரிமாறிய பந்தை ரமோஸ் தனது இடது காலால் வளைத்து உதைத் து கோலினுள் புகுத்தி போர்த்துக்கல்லை முன்னிலையில் இட்டார்.
அதனைத் தொடர்ந்து 33ஆவது நிமிடத்தில் புரூனோ பெர்னாண்டஸின் கோர்ணர் கிக்கைப் பயன்படுத்தி 39 வயதான பெப் தலையால் முட்டி போர்த்துக்கல்லின் இரண்டாவது கோலைப் புகுத்தினார்.
இடைவேளைக்குப் பின்னர் 51ஆவது நிமிடத்தில் டிகோகோ டேலொட் பரிமாறிய பந்தைக் கொண்டு தனது இரண்டாவது கோலை ரமோஸ் போட்டார்.
4 நிமிடங்கள் கழித்து ரமோஸ் பரிமாறிய பந்தை ரபாயல் குரேரோ கோலாக்க போர்த்துக்கல்லின் கோல் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
எனினும் 58ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் பின்கள வீரர் மெனுவல் அக்கஞ்சி அலாதியான கோல் ஒன்றைப் போட்டு சுவிட்சர்லாந்துக்கு ஆறுதல் கொடுத்தார்.
எவ்வாறாயினும் ரமோஸ் தனது 3ஆவது கோலைப் போட 71ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் 5 - 1 என அசைக்கமுடியாத முன்னிலையில் இருந்தது.
உபாதையீடு நேரத்தில் (90+2 நிமிடம்) ரபாயல் லியோ போட்ட கோலுடன் 6 - 1 என்ற கோல் வித்தியாசத்தில் போர்த்துக்கல் அமோக வெற்றியீட்டியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM