சாதனைகள் நிலைநாட்டி வெற்றியீட்டிய கண்டி ஃபெல்கன்ஸ்

By Digital Desk 5

07 Dec, 2022 | 09:41 AM
image

(நெவில் அன்தனி)

கலம்போ கிங்ஸ் அணிக்கு எதிராக அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் கண்டி ஃபல்கன்ஸ் அணி 109 ஓட்டங்களால் சாதனைடன் கூடிய வெற்றியை ஈட்டியது.

லங்கா ப்றீமியர் லீக் இருபது 20 கிரக்கெட் வரலாற்றில் ஓட்டங்கள் ரீதியில் ஈட்டப்பட்ட மிகப் பெரிய வெற்றி இதுவாகும். இந்த சாதனையுடன் இணைப்பாட்டத்திலும் புதிய சாதனை  நிலைநாட்டப்பட்டது.

அண்ட்றே ஃப்லெச்சர் குவித்த ஆட்டமிழக்காத சதம், வனிந்து ஹசரங்க டி சில்வா, ஃபெபியன் அலன் ஆகிய இருவரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன  கண்டி   ஃபெல்கன்ஸ் அணியின் வெற்றியை இலகுபடுத்தின.

Andre Fletcher hit the first century of LPL 2022, Colombo Stars vs Kandy Falcons, LPL 2022, Hambantota, December 6, 2022

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கண்டி ஃபெல்கன்ஸ் 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது.

பெத்தும் நிஸ்ஸன்க, அண்ட்றே ஃப்லெச்சர் ஆகிய இருவரும் 156 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப விக்கெட்டுக்கான புதிய இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டினர். லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் சகல விக்கெட்களுக்குமான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாகவும் இது பதிவானது.

Shoaib Malik and Dunith Wellalage scored 30 each as Jaffna Kings were bowled out for 137, Jaffna Kings vs Galle Gladiators, LPL 2022, Hambantota, December 6, 2022

துடுப்பாட்டத்தில் அண்ட்ரே ஃபலெச்சர் 67 பந்துகளில் 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். பெத்தும் நிஸ்ஸன்க 41 பந்துகளில் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களை விளாசினார்.

கார்லோஸ் ப்றத்வெய்ட் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

Kusal Mendis' half-century went in vain as Galle Gladiators went down to Jaffna Kings in the opening match, Jaffna Kings vs Galle Gladiators, Lanka Premier League 2022, Hambantota, December 6, 2022

200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கலம்போ கிங்ஸ் 14.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆரம்ப வீரராக விளையாடிய அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் (26), கீமோ போல் (22), டொமினிக் ட்ரெக்ஸ் 18) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

Wanindu Hasaranga took the first hat-trick in the history of the Lanka Premier League, Colombo Stars vs Kandy Falcons, LPL 2022, Hambantota, December 6, 2022

பந்துவீச்சில் கண்டி ஃபெல்கன்ஸ் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க டி சில்வா 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஃபேபியன் அலன் ஒரு ஓட்டத்திற்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிச்செல்களின் அபார ஆட்டங்கள் நியூஸிலாந்தின் வெற்றிக்கு...

2023-01-28 11:53:55
news-image

2022ஆம் ஆண்டின் சிறந்த விமானப்படை விளையாட்டு...

2023-01-28 11:07:43
news-image

அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்ட இங்கிலாந்து இறுதிப் போட்டியில்...

2023-01-27 21:58:26
news-image

மகளிர் இருபது 20 உலகக் கிண்ணத்தில்...

2023-01-27 20:31:41
news-image

முதலாவது அரை இறுதியில் இந்தியா -...

2023-01-27 13:26:33
news-image

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்...

2023-01-27 16:59:41
news-image

வருடத்தின் ஐசிசி வளர்ந்துவரும் அதிசிறந்த வீரர்...

2023-01-26 22:07:16
news-image

2022ஆம் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட்...

2023-01-26 22:08:08
news-image

பாபர் அஸாமுக்கு வருடத்தின் அதிசிறந்த ஐசிசி...

2023-01-26 17:32:25
news-image

வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீரர்...

2023-01-26 15:37:19
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் ரஷ்யர்கள் பங்குபற்றலாம்...

2023-01-26 15:41:21
news-image

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்...

2023-01-26 14:36:35