(நெவில் அன்தனி)
நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், உப சம்பியன் கோல் க்ளடியேட்டர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் நடைபெற்ற 3ஆவது லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் 24 ஓட்டங்களால் ஜெவ்னா கிங்ஸ் வெற்றியீட்டியது.
ஷொயெப் மாலிக், துனித் வெல்லாலகே ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களும் பினுர பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் ஜெவ்னா கிங்ஸின் வெற்றிக்கு வழிவகுத்தன.
ஜெவ்னா கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 138 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் க்ளடியேட்டர்ஸ் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
நுவனிது பெர்னாண்டோ (15 ஓட்டங்கள்), அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 45 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
நுவனிது பெர்னாண்டோவின் ஆட்டமிழப்புடன் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.
குசல் மெண்டிஸ் தனி ஒருவராக போராடி 51 ஓட்டங்களைப் பெற்று 5ஆவதாக ஆட்டமிழந்ததும் (97 - 5 விக்.) ஜெவ்னா கிங்ஸ் அணியில் மகிழ்ச்சி பொங்கத் தொடங்கியது.
அதேவேளை, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்த இமாத் வசிம் 17 ஓட்டங்களுடன் வெளியேற கோல் க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கனவு கலைந்துபோனது.
பின்வரிசை வீரர்க|ளும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.
பந்துவீச்சில் தனது முதல் 2 ஓவர்களில் 22 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை மாத்திரம் வீழ்த்திய பினுர பெர்னாண்டோ, 3ஆவது ஓவரில் ஒரு ஓட்டமும் கொடுக்காமல் 2 விக்கெட்களை வீழ்த்தி தனது விக்கெட் எண்ணிக்கையை 3ஆக உயர்த்திக்கொண்டார்.
யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் அணித் தலைவர் விpயகாந்த் வியாஸ்காந்த் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஜெவ்னா கிங்ஸ் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதும் துடுப்பாட்டத்தில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இணைப்பாட்டங்கள் இடம்பெறாததும் ஜெவ்னா கிங்ஸுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.
மத்திய வரிசையில் சிரேஷ்ட வீரர் ஷொயெப் மாலிக், 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் இளம் சகலதுறை வீரருமான துனித் வெல்லாலகே ஆகிய இருவரும் தலா 30 ஓட்டங்களைப் பெற்று அணியை ஓரளவு பலப்படுத்தினர்.
ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் தனஞ்சய டி சில்வா (29), அணித் தலைவர் திசர பெரேரா (16) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
கோல் க்ளடியேட்டர்ஸ் பந்துவீச்சில் வஹாப் ரியாஸ், இமாத் வசிம், நுவன் துஷார, நுவன் ப்ரதீப், இப்திகார் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
கலம்போ ஸ்டார்ஸ் அணிக்கும் கண்டி ஃபெல்கன்ஸ் அணிக்கும் இடையிலான இரண்டாவது எல்பிஎல் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM