அதீத பக்தியின் விபரீதம்

Published By: Digital Desk 2

06 Dec, 2022 | 04:53 PM
image

இந்திய குஜராத் மாநிலத்தில் அதீத பக்தியால் ஒருவர் யானை சிலைக்கு அடியில் படுத்து வழிபாடு செய்தபோது சிக்கிக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு யானை சிலைக்கு அடியில் சிக்கிக்கொண்டு போராட்டும் பக்தரின் வீடியோவும், அவரை விடுவிக்க அருகில் இருந்தவர்கள் முயற்சியும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவம் எப்போது நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, மேலும் பக்தர் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

வீடியோவில் ஒரு பக்தர் சிலையின் அடியில் படுத்துக் கொண்டு, கை, கால்களைப் பயன்படுத்தி சக்தியைப் பிரயோகித்து அதன் வழியாகச் வெளியேற முயல்கிறார்.

ஆனால், அவரால் முடியவில்லை. அவரைச் சுற்றிலும் பலர் சூழ்ந்துள்ளனர். கோவில் பூசாரியும் அந்த நபருக்கு உதவுகிறார் ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.

டுவிட்டர் பயனாளர் நிதின் பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது 1.80 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்