பொருளாதார நெருக்கடி காரணமாக சிறுநீரகங்களை விற்க முன்வந்த இலங்கை மக்கள் - வேட்டையாடிய கும்பல்

Published By: Rajeeban

06 Dec, 2022 | 04:27 PM
image

தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வறிய குடும்பங்களை ஏமாற்றி மனித உடற்பாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்

பொரளையில் உள்ள பிரபல மருத்துவமனை சிறுநீரகம் விற்பனை செய்தமைக்காக பணத்தை தரவில்லை என பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பொருளாதார நெருக்கடியின் மத்தியில் நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக மிகவும் சிரமத்தை எதிர்கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்களே சிறுநீரகங்களை விற்றுள்ளனர்.

திங்கட்கிழமை பொலிஸில் சரணடைந்த முக்கிய சூத்திரதாரி கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 15 கஜிமாவத்தையை சேர்ந்த 41 வயது நபரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 குறிப்பிட்ட நபர் சிறுநீரகத்தை விற்பனை செய்பவர்களிற்கும் அதனை பெற்றுக்கொள்பவர்களிற்கும் இடையில் தரகர் போல செயற்பட்டார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதற்காக கட்டணங்களை பெற்றுக்கொண்டதுடன் மாத்திரமில்லாமல் சிறுநீரகத்தை விற்பனை செய்பவர்களிற்கு மருத்துவமனையின் நிர்வாகம் வழங்கிய பணத்தையும் இவர் மோசடி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை சட்டவைத்திய அதிகாரி முன்நிறுத்தியவேளை அவர்களில் ஒருவரின் சிறுநீரகம் அகற்றப்பட்டமை குறித்து விபரம் தெரியவந்துள்ளது.

சிறுநீரகங்களை வழங்கினால் பெரும் பணம் தருவதாக தெரிவித்தனர் ஆனால் பணம் எதனையும் தரவில்லைஎன பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரிடமிருந்து அகற்றப்பட்ட சிறுநீரகம் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்...

2024-06-12 20:37:33
news-image

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த...

2024-06-12 20:33:05
news-image

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியை...

2024-06-12 20:19:01
news-image

கிரிந்திவெலயில் கோடாவுடன் ஒருவர் கைது

2024-06-12 20:14:05
news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813...

2024-06-12 20:13:13
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

களுத்துறையில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட கோடாவுடன் ஒருவர்...

2024-06-12 20:28:55
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49