பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியம் - சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானம்

By Digital Desk 2

06 Dec, 2022 | 05:01 PM
image

(எம்.மனோசித்ரா)

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியமென சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

உலக வங்கி , ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளே மேற்படி தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்  செவ்வாய்க்கிழமை (நவ.06)  இடம்பெற்ற நீண்ட, வட்டமேசை கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , நீண்டகால அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியுடன் இணைந்ததான இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்வைத்தார்.

உலக வங்கியின் துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் , ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவர் ஷிக்சின் சென், சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி பீட்டர் ப்ரூயர், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி கலாநிதி. உர்ஜித் பட்டேல் ஆகிய சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதானிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.  

அத்தோடு பிரதமர் தினேஷ் குணவர்தன, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் தினேஷ் வீரக்கொடி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி. நந்தலால் வீரசிங்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்டோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வியங்காட்டு சந்தை வியாபாரிகள் 13 பேருக்கு...

2023-02-08 11:30:14
news-image

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு : வடக்கு,...

2023-02-08 11:05:35
news-image

அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை...

2023-02-08 10:47:04
news-image

பௌத்தமதகுருமாரின் ஆர்ப்பாட்டம் - பதற்றநிலை

2023-02-08 10:59:33
news-image

யாழ். கல்வியங்காடு சந்தை வியாபாரிகள் 13...

2023-02-08 12:02:34
news-image

புதிய வரிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களே இன்று அதனை...

2023-02-08 10:40:35
news-image

இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும்...

2023-02-08 09:53:42
news-image

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் இன்றைய நிகழ்வை...

2023-02-08 09:12:50
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்...

2023-02-08 08:52:33
news-image

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதத்தினை...

2023-02-08 07:03:10
news-image

வருமான வரியை நீக்குமாறு தெரிவித்து நடத்தவுள்ள...

2023-02-07 17:19:54
news-image

முறை சார்ந்த மீளாய்வு மூலம் அரச...

2023-02-07 17:03:49