சமுதாயத்தில் முறையான வழிகாட்டல்களை கோரும் பெண்

Published By: Digital Desk 3

06 Dec, 2022 | 09:17 PM
image

(எம்.நியூட்டன்)

பெண் தலைமைத்துவங்களுக்கு முறையான வழிகாட்டல்கள் இருக்குமாயின் சமுதாயத்தில்  சிறந்த பிரஜையாக வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும் என  சுயதொழில் முயற்சியாக  தையல் மற்றும் கால் மிதி தயாரித்தல் என முன்னேற்றகரமான முயற்சியாளராக செயற்பட்டு வரும் புதிய சேனகத்தொரு - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.என்.பதீலா  தெரிவிக்கிறார்.

பெண் தலைமைத்தவமாக மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் இவர் தனது தொழில் முயற்சி தொடர்பாக எம்முடன் பகிர்ந்து கொண்டபோது,

முஸ்லிம் சமூகத்தில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட நாம்  சமுதாயத்தில்  எத்தகைய செயற்பாடு என்றாலும் முன்வர முடியாத நிலையே காணப்படுகின்றது.

சமுதாய ரீதியான சில தடைகளும் கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றது. இந்நிலையில்  எமது கிராம அலுவலர் பிரிவில் குழுக்கூட்டங்கள் பல இடம் பெறுவதுண்டு அவ்வாறு இடம்பெறுகின்றபோது ஒரு நிறுவனமொன்று கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தது.

அக்கூட்டத்திற்கு செல்வதா இல்லையா என்று இருந்தபோது அந்த நிறுவனத்தில் ஆலோசகராக செயற்பட்டு வரும் அதிகாரியொருவர் எங்களையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டிருந்தார்.

எனினும் எனக்குத் தயக்கமாகவே இருந்து. அவரிடமே எங்களுக்கு வேறொரு நேரத்தில் இக்கூட்டத்தை ஒழுங்குபடுத்தி தருமாறு கூறினேன். அதற்கேற்ப எமக்கு ஏற்ற நேரத்தில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அந்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டார்கள்.

இதற்கு அமைவாக  அந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு சமூகத் திட்டத்தின் கீழ் சுயதொழில் முயற்சிகள் செய்வதற்கான  ஊக்கப்படுத்தல்கள் மற்றும் பயிற்சிகளை எமக்கு வழங்கினார்கள்.

அதன் தொடர்ச்சியாக குழுச் செயற்பாடுகளை உருவாக்கி குழுக்கள் ஊடாக சேமிப்புக்கள் குழுச் செயற்பாடுகள் மேற்கொண்டு மீள் சுழற்சிக் கடன் ஊடாக கால்மிதி உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்களை தந்தார்கள். அதிலிருந்து எங்கள் செயற்பாடானது முன்னேற்றகரமாக இருந்தது .

குழுக்களுக்கு இடையே கலந்துரையாடல்களும் விசேடமாக அந்த நிறுவனத்தின் தலைமை நிறுவனத்தினுடடான கலந்துரையாடர்கள் எங்கள் கிராமத்திலுள்ள அமைப்புக்கள் என தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.

இத்தகைய  செயற்பாடானது முடங்கிப் போயிருந்த மக்களுக்கு புத்துணர்வைத் தந்தது போல் எமது சமூகத்தில் நாங்களே முன்னேறுவதற்கான வலுவை ஏற்படுத்தி தந்தது .

குறிப்பாக கரித்தாஸ் - கியூடெக் நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் அடிகளார் எங்களுக்கு கூடுதலான ஊக்கமளித்து எங்கள் பகுதிக்கு எத்தகைய உதவிகள் என்றாலும் உடனடியாகவே செய்ததரக்கூடிய மன நிலையில் இருந்து உதவிகள் செய்பவர்.

இத்தகைய  சூழலில் எமது தொழில் முயற்சியை மட்டுமன்றி எங்கள் சமுதாயத்தில் எத்தகைய தேவைகள் உள்ளனவே அவற்றை யாரிடம் சென்று கதைப்பது எவ்வாறு கதைப்பது என்ற  விடயத்தை  நாங்களே செய்து வருகிறோம்.

குறிப்பாக எமது பிரதேசத்தில் சிறுவர்களை விழிப்பூட்டும் நிகழ்வுகள் பெண்களுக்கான விழிப்பூட்டல்கள்  இளைஞர்களுக்கான செயற்றிட்டங்கள் என பல்வேறு விடையங்களை செய்து வருகின்றோம். 

குறிப்பாக இன்று எமது சமுகத்தில் நிலவி வருகின்ற போதைவஸ்து பயன்பாடு அதிகரித்துச் சென்று இளம் சமுதாயம் நலிவடைந்து செல்கின்ற நிலையில் நாங்கள் சிறவர்கள் இளையவர்கள் மட்டில் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு உயிரைக் கொல்லும் போதைவஸ்திலிருந்து அவர்களைப் பாதுகாத்து வருகின்றோம்.

சிறுவர் முதியவர்களைக் கொண்டே ஏனையவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலங்களையும் நடாத்தியுள்ளோம். நான் ஏற்கனவே தையல் வேலைகளை செய்து வந்த எனக்கு கால்மிதி தயாரிப்பது என்பது மற்றுமொரு தொழில முயற்சியாக உருவாகியுள்ளது.  

தையல் வேலை ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப எமக்கான ஓடர்கள் கிடைக்கும் அவ்வாறான  ஓடர்கள் கிடைக்காத நிலையில் கால் மிதி தயாரிப்பை தொடர்ந்து மேற்கொள்ளக்கூடியதாகவுள்ளது.

கால் மிதிக்கான பயிற்சியின்போது ஆரம்பத்தில் 7 பேர்  இருந்தார்கள் தற்போது 21 பேராக இணைந்துள்ளார்கள். கால் மிதியில் ஒரேமாதிரியானது என்றில்லாமல் பல்வேறு விதமான வடிவமைப்புக்களில் செய்யக்கூடியதாகவும் அதற்கான பயிற்சிகளை இந் நிறுவனம் தொடர்ந்தும் வழங்கிவருகின்றது.

எங்களின் முயற்சிகளை பார்த்து  பிரதேச செயலகம் எமக்கு  சுயதொழில் செய்வதற்கான   கடன் உதவி கள் மற்றும் பொருள் உதவிக்ள  தந்துதவினார்கள். மேலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் இடம்பெறுகின்ற கண்காட்சி விற்பனைக்கூடங்களில் எங்களையும் பங்கு பற்றுமாறு அழைப்புக்கள் விடுகின்றார்கள். எமது பிரதேசத்திற்கு மட்டுமன்றி வெளியிடங்களுக்கும் எமது உற்பத்திகளை கண்காட்சிப் படுத்துவதுடன் விற்பனை செய்கின்ற நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றது.  இத்தகைய சந்தர்ப்பங்களினால் புதிய விடையங்களை கற்றுக்கொள்கின்ற அதேவேளை பல்வேறு பட்டவர்களையும் சந்திக்கும் வாய்ப்புக்கள் உருவாகின்றது. இதன் மூலம் எங்களுக்கான பல சந்தை வாய்ப்புக்கள் உருவாகி வருகின்றது.

இது மட்டுமன்றி ஒரு சில வர்த்தக நிலையங்கள்   எமக்கு ஓடர்களையும் தந்து வருகின்றார்கள். எங்களுக்கு இந்த முயற்சிகளால் எங்கள் குடும்பத்தை காப்பதறகு உதவுகின்றது . 

இதை நாம் அடுத்து கட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும்.எமது பகுதியில் என்னைப்போன்று பலர் இருக்கின்றார்கள் பலர் இந்தத் தொழில முயற்சியை பழகிக்கொண்டு இருப்பதுடன் இன்னும் பலர் இதனை செய்யக்கூடியவர்களாகவும் சிலர் வீடுகளில் வைத்து செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இவர்களை ஒருங்கிணைத்து பொது இடத்தில் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கினால் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியும் இதற்கு  எமக்கான பொது மண்டபமும் மூலப்பொருட்களும் தேவையாகவுள்ள இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக  மூலப்பொருட்களை பெற்றுக் கெள்வது மிகவும் சவால் நிறைந்ததாகவுள்ளது.  எனினும் எமது தேவைக்கு மூலப்பொருட்களை ஓரளவு பொற்றுக்கொள்ளக்கூடியதாகவுள்ளது.

நாம் அடுத்த கட்டத்திற்கு செல்வதாயின் தூரநோக்குடைய வல்லுனர்கள் இருந்தால் இது சாத்தியப்படக்கூடியதாக இருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04