அரசாங்கத்தின் சதித்திட்டங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் - கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை

Published By: Digital Desk 2

06 Dec, 2022 | 05:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

அரசியலமைப்பு பேரவை உட்பட சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதற்கு அரசாங்கம் அவசரப்படுவதன் நோக்கம் எங்களுக்கு புரிகின்றது. அதனால் அரசாங்கத்தின் சதித்திட்டங்களில் சபாநாயகர் சிக்கிக்கொள்ளக் கூடாது என எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.06)  சபாநாயகரின் அறிவிப்பின்போது, அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் சபாநாயகரினால்  அறிவிக்கப்பட்ட விடயத்தை விமர்சித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுமதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினர்களை நியமிப்பதை அவசரப்படுத்த வேண்டாம். இது தொடர்பில்  கால அவகாசம் வழங்க வேண்டும்.

ஏனெனில், ஆளும் தரப்பில் இருந்து 40பேர் சுயாதீன உறுப்பினர்களாக எதிர்த்தரப்பில் அமர்ந்துள்ளனர். அதனால் அவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாட இருக்கின்றது. அதனால் இந்த விடயத்தை அவரசப்படுத்த வேண்டாம்.

அத்துடன் அரசாங்கம் சுயாதீன ஆணைக்குழுகளை நியமித்தும் ஆணைக்குழுக்களை நியமித்தும் தேர்தல் ஆணைக்குழுவை நியமித்தும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

அதனால் அரசாங்கத்தின் சதித்திட்டங்களில் சபாநாயகராகிய நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம். உங்களை நாங்கள் பாதுகாக்கின்றோம். 

அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளும் போது, அரசாங்கம் எதற்காக அவரப்படுகின்றது என்பது எதிர்க்கட்சியில் இருக்கும் எங்களுக்கு நன்றாகவே விளங்குகின்றுது.

அதனால் அரசியலமைப்பு பேரவைக்கு சுயாதீன உறுப்பினர்களை நியமிக்கும் விடயத்தை அவசரப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

அதனை தொடர்ந்து எழுந்த சபைமுதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கையில், 21ஆம் திருத்தத்தை நாங்கள் அனைவரும் இணைந்து அனுமதித்துக்கொண்டோம்.

அதன் பிரகாரம் அரசியலமைப்பு பேரவை, ஆணைக்குழுக்களை அமைக்க வேண்டி இருக்கின்றது. இது அரசியலமைப்பு உட்பட்ட விடயமாகும். 

அரசாங்கம் என்ற வகையில் அரசியலமைப்புக்கு உட்பட்ட விடயங்களை செயற்படுத்துவது அரசாங்கத்தின் கடமை.  அதனையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. அதற்கு ஆதரவளிப்பது அனைவரதும் கடமையாகும் என்றார்.

இதன்போது பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நான் எனக்கு வழங்கப்பட்ட கடமைமை செய்கிறேன். சுயாதீனக் குழுக்களை அமைக்க வேண்டும்.

அரசியலமைப்புப் பேரவையை நியமிக்க வேண்டுமென நீங்கள் (லக்ஷ்மன் கிரியெல்ல) கோரிவந்தீர்கள். இப்போது அவற்றை செய்யும்போது எதிர்க்கிறீர்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22