யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூன்று பேருக்கு இரட்டை மரணதண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி மா. இளஞ்செழியன் மேற்படி வழங்கினார்.
குற்றவாளிகள் மூவருக்கும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவருக்கும் தலா ஒரு இலட்சம் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேசத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டுதேர்தல் பிரசாரத்திற்காக சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM