இயக்குநர் பா. ரஞ்சித் பாராட்டிய 'காலேஜ் ரோடு'

By Digital Desk 2

06 Dec, 2022 | 11:55 AM
image

நடிகர் லிங்கேஸ்வர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'காலேஜ் ரோடு' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்ட இயக்குநர் பா.ரஞ்சித் பட குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஜெய் அமர்சிங் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'காலேஜ் ரோடு'. இதில் 'கபாலி', 'பரியேறும் பெருமாள்', 'கஜினிகாந்த்', 'டானாக்காரன்' ஆகிய படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த நடிகர் லிங்கேஸ்வர் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் நடிகை மோனிகா, நடிகர் ஆனந்த் நாகு, கே பி ஒய் அன்சர், 'நாடோடிகள்' பரணி, 'மெட்ராஸ்' வினோத், 'அருவி' பாலா பொம்மு லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆப்ரோ இசையமைத்துள்ளார். 

கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் குறும்பு நிறைந்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எம் பி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரவீன் மற்றும் சரத் தயாரித்துள்ளனர்.

டிசம்பர் 30ஆம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன்னோட்டத்தில் இணையதள குற்றங்கள் குறித்தும், அதன் சுவாரசியமான பின்னணி குறித்தும், இதற்கும் கல்லூரி கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் இடையேயான தொடர்புகள் குறித்தும் திடீர் திருப்பங்களுடன் விவரிக்கப்பட்டிருக்கிறது. காதல், நகைச்சுவை, நட்பு என கொமர்ஷல் அம்சங்களுடன் தயாராகி இருப்பதால் இந்த 'காலேஜ் ரோடு' திரைப்படத்திற்கு இளைஞர்களிடத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்