விஜய் அண்டனியின் 'ரத்தம்' படத்தின் டீசர் வெளியீடு

By Digital Desk 2

06 Dec, 2022 | 11:13 AM
image

திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரத்தம்' எனும் திரைப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

'தமிழ் படம்', 'தமிழ் படம் 2' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சி. எஸ். அமுதன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ரத்தம்'. இதில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகைகள் நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன்,கலைவாணி, நடிகர்கள் நிழல்கள் ரவி, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல் போக்ரா ஜி. தனஜெயன் பிரதீப், பங்கஜ் போக்ரா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் இயக்குநர்கள் வெங்கட் பிரபு, வெற்றிமாறன், பா ரஞ்சித் ஆகியோரின் பின்னணி குரலுடன் இப்படத்தின் மையக் கருத்து சொல்லப்பட்டிருப்பது.. புதுமையாக இருப்பதால் ரசிகர்கள் இதனை வரவேற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக டீசரின் இறுதியில் கதையின் நாயகனான விஜய் அண்டனி 'குதிர மேய்ச்சிட்டிருந்தேன்' என பதிலளிப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்