ஜி20 தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவின் தலைமையின் மீது நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைதி மற்றும் நிலையான உலகத்தை நிலைநாட்ட அனைவரையும் ஒன்றிணைக்க நண்பர் பிரதமர் நரேந்திர மோடியை நம்புவதாக மக்ரோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலி, இந்தியா ஜி 20 தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இப்ராஹிம் முகமது சோலிஹ் தனது ட்விட்டர் பதிவில், ஜி20 தலைவராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அரசு மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துககொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கும், அழுத்தமான பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகளைக் காண்பதற்கும் இராஜதந்திரம் மற்றும் உரையாடலை மேம்படுத்துவதற்கு இந்தியாவின் தலைமை மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் பலவும் ஜி20 தலைமைத்துவம் குறித்து இந்தியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM