ஐக்கிய தேசியக்கட்சியின் வரலாற்றில் பல முறை பௌத்த மத குருமார்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஐம்பெரும் சக்தி (பஞ்ச மகா பலவேகய) என்ற வகையில் மதகுருமாரை கௌரவப்படுத்தியுள்ளது என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ரோகன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
கண்டி, டெவோன் ஹோட்டலில் நேற்று (05) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
ஐக்கிய தேசியக்கட்சியின் ஆரம்பகால தலைவர் டி.எஸ் சேனாநாயக்க அதன் பின்னர் 1953ல் ஜோன் கொத்தலாவல, பின்னர் 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஆட்சிக்கு வந்த போது பேராதனை கெட்டம்பே ராஜோபவனாராம விகாரைக்கு முன் வேலி அடித்து பக்தர்கள் உள்ளே செல்ல முடியாது செய்தமை, 1987/88 காலப்பகுதியில் ஆர். பிரேமதாசவின் காலம் போன்ற அனைத்திலும் பல முறை பௌத்த, மத குருக்கள் இழிவுபடுத்தப்பட்டனர். வரலாற்றைத் திருப்பிப்பாருங்கள்.
எனவே, இன்றைய ஆட்சியிலும் பௌத்த மதகுருமாருக்கு ‘காவி உடை அணிந்த 'பட்டோக்கள்” (சிவுற ஹெந்கத் பட்டோ)’ என்று குறிப்பிட்டமை ஆச்சரியப்படத்தக்க விடயம் அல்ல என்றார்.
அதாவது 69 இலட்சம் பௌத்தர்கள் வாக்களித்து, ருவன்வெலிசாயவில் பதவிப்பிரமாணம் எடுத்த ஜனாதிபதியின் அரசில், தற்போதைய ஆட்சித் தலைவர் மதகுருமாரை ‘பட்டோ’ என அழைத்து அவமானப்படுத்தி உள்ளார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM