இயற்கை மரணங்களை விட வாகன விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. 

குறிப்பாக வாகனங்களில் செல்லும் போது தமது பாதுகாப்புக்காக  இருக்கை பட்டியை (சீட் பெல்ட்) அணிவது வழமையாகும்.

சீட் பெல்ட்டை அணிவதன் மூலம் இடம்பெறும் வாகன விபத்துக்களிருந்து உயிர் தப்பிக்க வாய்ப்புகள் அதிகம். 

எனினும் சீட் பெல்ட் அணியாமல் சென்ற சாரதி ஒருவர் விபத்தொன்றிலிருந்து உயிர் தப்பிய அதிசய சம்பவம் ஒன்று சீனாவில் பதிவாகியுள்ளது.

அதாவது சீனாவின் ஹெய்லோஸ்ஜியாங் மாகாணத்திலுள்ள கிராம பிரதேசமொன்றில் மலைப்பாங்கான பகுதியில் அதி கூடிய சுமையுடன் சென்ற லொறி ஒன்று வீதியிலிருந்து விலகி விபத்துக்குள்ளாகுவதும், குறித்த வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதி உடனடியாக வாகனத்துக்கு வெளியே பாய்ந்து உயிர் தப்புவதுமான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

 அதிக சுமையுடன் உடைந்த பாலம் ஒன்றின் வழியாக செல்ல முற்றபட்ட குறித்த லொறி பாரம் தாங்காமல் குடைசாய்ந்துள்ளது. உடனே சாரதி வாகனத்தின் யன்னல் வழியாக பாய்ந்துள்ளார். இதன் போது சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

சில சமயங்களில் சாரதி வாகனத்தின் இருக்கை பட்டியை அணிந்திருந்தால் ஆபத்தான நிலைமையை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.