3 குடும்பங்கள் கடல் அட்டை பண்ணை வேண்டாமென கிராஞ்சியில் போராட்டம் நடாத்துவது கவலையளிக்கிறது - பூநகரி சிறீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் 

Published By: Vishnu

05 Dec, 2022 | 08:28 PM
image

கிராஞ்சியில் கடல் அட்டை பண்ணைகள் வேண்டாம் என போராட்டம் நடாத்தும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சுமார் 200 குடும்பங்களின் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் செயற்படுவது கவலை அளிப்பதாக பூநகரி சிறீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தம்பிப்பிள்ளை மகேந்திரன் கோரிக்கை முன்வைத்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று(05.12.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், மேலதிக வாழ்வாதாரத்தினை பெற்றுக்கொள்வதற்காக கடலட்டைப் பண்ணைகளை கிராஞ்சி கடற்றொழிலாளர் சங்கத்தினை சேர்ந்த சுமார் 203 உறுப்பினர்களை விண்ணப்பித்து விட்டுக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சுயலாபத்திற்காகவும் குறுகிய நலனுக்காகவும் கடலட்டைப் பண்ணைக்கு எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

சுமார் 266 கடற்றொழிலார்களை உறுப்பினர்களாக கொண்ட கிராஞ்சி கடற்றொழிலாளர் சங்கத்தினால், நக்டா திணைக்களத்திற்கு 174 உறுப்பினர்களின் கடலட்டைப் பண்ணைக்கான விண்ணப்பங்கள் நக்டா நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன.

கிராஞ்சியில் வெளியாருக்கு அட்டை பண்ணை வழங்கப்படவில்லை அவ்வாறு வழங்கப்பட்டால் அதை நாம் எதிர்ப்போம்.

ஆனால் கிராஞ்சியில் போராட்டம் நடத்துபவர்கள் பிணாமிகளின் பெயரில் பண்ணைகளை அமைத்துவிட்டு பண்ணை வேண்டாம் எனப் போராடுகின்றனர்.

எமது பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக  வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்படவுள்ள அட்டைப் பண்ணைகளை தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகவே ஊடகங்கள் கிராஞ்சியில் அட்டை பண்ணை யாருக்கு வழங்கப்படுகிறது. கடலுக்கு பாதிப்பாக அமையப்பெற்றதா என்ற  உண்மை  வெளிப்படுத்துவதோடு நேரடியாக வருகை தந்து உண்மை நிலையை ஆாய்ந்து செய்திகளை வெளிப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36
news-image

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

2024-02-23 19:44:18
news-image

புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

2024-02-23 18:31:37
news-image

புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில்...

2024-02-23 18:12:51
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு...

2024-02-23 18:18:03
news-image

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர்களின்...

2024-02-23 17:38:55
news-image

வட்டவளையில் தோட்டமொன்றில் புதைக்கப்பட்ட 6 மாத...

2024-02-23 18:30:28
news-image

மன்னார் - வங்காலையில் ஆசிரியரால் தாக்கப்பட்ட...

2024-02-23 17:29:20
news-image

இலங்கை மிகப்பெரும் அரசியல் சர்வதேச அரசியல்...

2024-02-23 17:45:30