காணாமல்போனோரின் ஆர்ப்பாட்டத்தை கண்டு கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர்

Published By: Digital Desk 2

05 Dec, 2022 | 05:44 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

பாராளுமன்ற சுற்றுவட்டப்பாதையில் இரு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற நிலையில் அரச நிர்வாக சேவையில் நியமனம் கிடைக்காதோரின் போராட்டத்தில் கவனம் செலுத்திய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, காணாமல் போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டத்தை கண்டு கொள்ளவில்லை.

பாராளுமன்ற சுற்றுவட்டப்பாதையில் திங்கட்கிழமை (டிச. 05) காலை அரச நிர்வாக சேவையில் இணைத்துக்கொள்ளப்படாததால் அரச நியமனத்தை இழந்த 465 பட்டதாரிகள் தொடர்பான போராட்டம் வீதியின் ஒரு புறமும் காணாமல் போனோர் தொடர்பான போராட்டம் வீதியின் இன்னொரு புறமும் இடம்பெற்றது.

இரு தரப்பு ஆர்ப்பாட்டக்காரர்களும் பாரிய பதாகைளையும் சுலோக அட்டைகளையும் தங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாராளுமன்றம் இன்று கூடிய நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது பாராளுமன்றத்துக்கு வருகை தந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தனது வாகனத்தில் இருந்து இறங்கி அரச நிர்வாக சேவையில் இணைத்துக்கொள்ளப்படாததால் அரச நியமனத்தை இழந்த 465 பட்டதாரிகள் தொடர்பான போராட்டக்காரர்களுடன்  பேசிவிட்டு புறப்பட்டார்.

பின்னர் அவர் பாராளுமன்றத்தில் அரச நியமனத்தை இழந்த 465 பட்டதாரிகள் தொடர்பாக சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஆனால்  காணாமல் போனோர் தொடர்பான போராட்டம் தொடர்பில் கண்டு கொள்ளாத எதிர்க்கட்சித்தலைவர்   பாராளுமன்றத்திலும்  எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்