(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
மின் கட்டணத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் அது தொடர்பில் ஜனாதிபதியுடனும் அமைச்சரவையிலும் கலந்துரையாடுவேன்.
அத்துடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தி இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அது தொடர்பில் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுப்பேன் என சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச.05) பொது ஜன பெரமுன எம் .பி ஜகத்குமார, விமல் வீர வன்ச உள்ளிட்ட பலரும் மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் நான் இணக்கம் தெரிவிக்கத் தயாரில்லை.
எனினும் மின் உற்பத்திக்கான அதிகரித்த செலவு, உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிப்பும் இதற்கு முக்கிய காரணமாகும்.
1962 ஆம் ஆண்டு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது முதல் எத்தனை தடவைகள் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பில் நாம் பார்க்க வேண்டும்.
முதலில் எமது நாட்டில் மின்சாரம் தொடர்பான கொள்கை எந்தக் காலத்திலும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதுவும் இத்தகைய நெருக்கடிகளுக்கு காரணமாகும்.
மின்சாரத்துறை மூன்று பிரிவுகளாக செயல்படுகின்றது. மின் உற்பத்தி, மின் சேமிப்பு மற்றும் மின் விநியோகம் என அது செயல்படுத்தப்படுகிறது.
இந்த மூன்று பிரிவுகளில் எந்த பிரிவு நட்டத்தில் இயங்குகிறது என பார்ப்பது அவசியம். எமது நாட்டிற்கு பொருத்தமான மின் உற்பத்தி என குறிப்பிடும் போது அது நீர் மின் உற்பத்தியே என குறிப்பிட முடியும்.
நீர் இல்லாத காலங்களில் எரிபொருள் மற்றும் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் போது அதற்கு பெரும் செலவுகள் ஏற்படுகின்றன. மின் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலைமை அதனால் தான் ஏற்படுகின்றது.
இவ்வாறு மின் கட்டணம் மேலும் மேலும் அதிகரிக்கப்படும் போது எமது தேசிய கைத்தொழில் துறை செலவுகள் அதிகரித்து அதன் மூலம் நாட்டின் பொருளாதாரமே பாதிப்படுகிறது. அத்துடன் பணவீக்கமும் ஏற்படுகிறது.
எவ்வாறெனினும் மின்சார சபையை 8 துண்டுகளாக பிரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வெளியிடப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.
அவ்வாறான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பலரும் அவ்வாறான கூற்றுக்களை வெளியிட்டு வருவதுடன் சில பத்திரிகைகளும் அதனை செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.
இருந்தபோதும் மின் கட்டணத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் அது தொடர்பில் ஜனாதிபதியுடனும் அமைச்சரவையிலும் கலந்துரையாடுவேன் அத்துடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தி இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அது தொடர்பில் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM