செய்திகளை அறிக்கையிடும்போது உண்மையை கண்டறிந்து பிரசுரிக்க வேண்டும் - சபாநாயகர்

Published By: Digital Desk 2

05 Dec, 2022 | 09:24 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

பத்திரிகை அறிக்கையிடலில் பொறுப்புடன் மற்றும் உண்மையைக் கண்டறிந்து செய்தி அறிக்கையிடுமாறு ஆங்கிலப் பத்திரிகையொன்றின் ஆசிரியருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுப்பதாக சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச. 05) அறிவித்தார்.

2022 டிசம்பர் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியான குறித்த ஆங்கிலப் பத்திரிகையில்  Committee rejects move to increase retirement age of Parliament Secretary General  எனும் தலைப்பின் கீழ் பிரசுரிக்கப்பட்ட செய்தியறிக்கை தவறான அறிக்கை என்பதை வலியுறுத்தி மேற்கொண்ட அறிவிப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அண்மையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் அவரது தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்றப் பணியாளர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் ஓய்வுபெறுதல் பற்றி எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும், அன்றைய தினம் பொதுவாகப் பாராளுமன்றப் பணியாளர்களின் ஓய்வூதிய வயது தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடப்பட்டது என்றும் சபாநாயகர் வலியுறுத்தினார்.

அந்தப் பத்திரிகை அறிக்கையிடலில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட பணியாளர்கள் பற்றிய விடயங்கள் தொடர்பிலும் எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் சபாநாயகர் அறிவித்தார்.

சபாநாயகரின் மேற்படி அறிவிப்புக்கு இணங்கும் வகையில் சபை முதல்வர்   சுசில் பிரேமஜயந்த  மேற்கூறப்பட்ட செய்தி அறிக்கையில் உள்ள அனைத்துவிடயங்களும் தவறானது எனக் குறிப்பிட்டார்.

சபாநாயகரின் கீழ் நிர்வகிக்கப்படும்  சாவஸ்திரி கட்டடம் தொடர்பிலும் பொதுவாகப் பாராளுமன்றப் பணியாளர்களின் ஓய்வூதிய வயதை ஏனைய அரச சேவையயைப் போன்று எந்த மட்டத்தில் பேணுவது என்பது தொடர்பிலும் மாத்திரமே பாராளுமன்றப் பணியாளர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டார்.

அதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் அல்லது அவரது பணியாளர்கள் தொடர்பில் எந்தவொரு விடயமும் கலந்துரையாடவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அதனால் இந்த செய்தி அறிக்கைக்கு பொறுப்புக்கூறவேண்டிய நபர்களை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அழைக்குமாறு சபை முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, மேற்கூறப்பட்ட பத்திரிகை அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், அந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் ஓய்வூதிய வயது தொடர்பில் எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் பொதுவாகப் பாராளுமன்றப் பணியாளர்களின் ஓய்வூதிய வயது தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் பத்திரிகையில் சிறிய தவறு இடம்பெற்றிருக்கின்றது. அந்த தவறை நிவர்த்தி செய்யுமாறு பத்திரிகையின் ஆசிரியருக்கு அறிவுறுத்தினால் போதும். ஊடக சுதந்திரத்திற்கு இடமளிக்கும் வகையில் இந்த விடயத்தை பெரிது படுத்த தேவையில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17