Elegance, Excelsior ஆகிய இரு விசேட வங்கிச் சேவைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள மக்கள் வங்கி

By Digital Desk 2

05 Dec, 2022 | 02:38 PM
image

இலங்கையின் முதன்மையான, உரிமம் பெற்ற வர்த்தக வங்கியான மக்கள் வங்கி, Elegance மற்றும் Excelsior என்ற நாமங்களில் இரண்டு புதிய தயாரிப்பு வழங்கல்களை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அதன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கை முறை தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட விரிவான வங்கிச்சேவை தீர்வுகளை வழங்குகிறது. 

Excelsior என்பது ஒரு தனிப்பட்ட வங்கிச்சேவை வசதியாகும். இது செல்வந்தர்களின் வாழ்க்கைக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கும். நுஒஉநடளழைச என்பது கூடுதல் தொகையிலான சம்பளம் பெறுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட வங்கிச் சேவைத் திட்டமாகும்.  

மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவரான சுஜீவ ராஜபக்ஷ அவர்கள், இரண்டு தயாரிப்புகளின் அறிமுக நிகழ்வில் உரையாற்றுகையில்,

“எமது ஸ்தாபகக் கோட்பாடுகளை உண்மையாக கடைபிடிக்கும் அதே வேளையில், மாறிவரும் காலங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாம் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்பட்டு வருகிறோம்.

விசேடமாக வடிவமைக்கப்பட்ட எமது வங்கிச்சேவை சேவை திட்டங்களான Elegance மற்றும் Excelsior ஆகியவற்றின் அறிமுகமானது எமது பயணத்தில் ஒரு முக்கிய சாதனை இலக்கினைக் குறிக்கிறது.

வாடிக்கையாளர்கள் சௌகரியம், நெகிழ்வுத்தன்மை, அங்கீகாரம் மற்றும் தனிப்பட்ட அனுபவம் ஆகியவற்றைத் தேடியே வங்கிகளுக்கு வருகிறார்கள்.

அதனாலேயே மக்கள் வங்கியில் நாம் அதிசிறந்த தொழில்நுட்பம், வர்த்தகநாமமிடல் மற்றும் மகத்துவமான சேவை ஆகியவற்றில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார். 

செல்வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் கூடுதல் சம்பளம் ஈட்டும் தொழில் வல்லுனர்களை இலக்காகக் கொண்டு, மக்கள் வங்கி சமீபத்தில் Elegance மற்றும் Excelsior என்ற பெயரில் இரண்டு விசேட வங்கிச் சேவைத் தீர்வுகளை அறிமுகப்படுத்தியது. மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, பொது முகாமையாளர் ரஞ்சித் கொடித்துவக்கு  மற்றும் மக்கள் வங்கியின் தனிநபர் வங்கிச்சேவைப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் ரேணுகா ஜயசிங்க ஆகியோரிடமிருந்து ஒவ்வொரு திட்டத்தின் முதலாவது வாடிக்கையாளர்கள் தமது அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் காட்சி

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும்ஃபொது முகாமையாளருமான ரஞ்சித் கொடித்துவக்கு அவர்கள் இரண்டு புதிய தயாரிப்பு வழங்கல்களைப் பற்றி கருத்து வெளியிடுகையில்,

“வாடிக்கையாளர்கள் தங்கள் வாழ்க்கை முறை தேவைகளுக்கு பொருந்தக்கூடிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாடுவது அதிகரித்துள்ளது. 

மக்கள் வங்கியில், நாம் இதை அடையாளம் கண்டு, நுடநபயnஉந என்ற தனிப்பட்ட வங்கிச்சேவை முன்மொழிவு மற்றும் நுஒஉநடளழைச என்ற கூடுதல் தொகையில் சம்பளம் பெறுபவர்களுக்காக உருவாக்கப்பட்ட வங்கிச் சேவைத் திட்டம் ஆகியவற்றை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த இரண்டு தயாரிப்புகளும் வாடிக்கையாளர்களை மையப்படுத்துவதற்கு அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மக்கள் வங்கி கொண்டுள்ள உறுதிப்பாட்டின் தெளிவான அறிகுறியாகும்.

செயல்பாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் அதியுயர்ந்த வாடிக்கையாளர் திருப்தியை வழங்குவதில் வங்கி உறுதியான கவனம் செலுத்தியுள்ளது.

அதனாலேயே, பல்வேறு வாடிக்கையாளர் திருப்தி மதிப்பீட்டுத் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு தொடு புள்ளியிலும் எங்கள் சேவையின் தரத்தை அளவிடத் தொடங்கியுள்ளோம்.

மேலும் அந்த அளவீடுகளை எங்கள் முக்கிய பெறுபேற்றுத்திறன் குறிகாட்டிகளில் உட்பொதித்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார். 

மக்கள் வங்கியின் Elegance திட்டமானது, செல்வந்தர்களின் வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு முழுமையான அணுகுமுறையை முன்னெடுக்கிறது.

இதன்படி, Elegance வாடிக்கையாளர்கள் தனிப்பயனாக்கப்பட்ட டெபிட் அட்டை, கடனட்டை மற்றும் காசோலைப் புத்தகம் போன்ற பல நன்மைகள் மற்றும் வரப்பிரசாதங்கள் மற்றும் இலவச பயணக் காப்புறுதி, விமான நிலைய ஓய்வறை வசதி, பிரத்தியேக வாடிக்கையாளர் உறவு அதிகாரி மற்றும் வங்கிச் சேவைகளுக்கான முன்னுரிமை வீதங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றைப் பெறுவார்கள்.

கொழும்பு 7 மற்றும் இரத்தினபுரியில் உள்ள இரண்டு பிரத்தியேக Elegance வாடிக்கையாளர் சேவை மையங்களில் அவர்களுக்கான சேவைகள் வழங்கப்படும்.

Elegance வாடிக்கையாளர்கள் 742 மக்கள் வங்கிக் கிளைகளில் எந்தவொன்றுக்கும் சென்றால், வங்கி முகாமையாளரால் அவர்களது தேவைகள் நிறைவேற்றப்படும். 

மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பொது முகாமையாளருமான ரஞ்சித் கொடித்துவக்கு ஆகியோர் உரையாற்றும் காட்சி


Excelsior சேவை வழங்குதலுடன், மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வேகமான மற்றும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக ஒவ்வொரு மக்கள் வங்கிக் கிளையிலும் பிரத்தியேக Excelsior தூதுவருடன் தனிப்பயனாக்கம் கொண்ட கவனிப்பு வழங்கப்படும்.

அவர்கள் ஒரு Excelsior VISA Signature கடனட்டை மற்றும் மேம்படுத்தப்பட்ட பரிவர்த்தனை வரம்புகளுடன் கூடிய Excelsior டெபிட் அட்டையையும் பெற்றுக்கொள்வார்கள்.

அவர்கள் தமது வங்கிப் பரிவர்த்தனைகளில் பல முன்னுரிமை வீதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மேலதிகமாக நடைமுறைக் கணக்கைத் திறக்கும்போது ஒரு விசேட Excelsior காசோலைப் புத்தகத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.

Elegance மற்றும் Excelsior வாடிக்கையாளர்கள் இரு தரப்பினரும் பீப்பிள்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து வாகனம் மற்றும் சொத்துக் காப்புறுதிக்கான வெளியிடப்பட்ட கட்டணங்களை விடவும் முன்னுரிமை அடிப்படையிலான வீதங்களைப் பெறுவார்கள்.

1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கியானது, ரூபா 3.0 டிரில்லியனுக்கு கிட்டிய ஒருங்கிணைந்த சொத்துக்கள் மற்றும் வங்கித் துறையின் சொத்துக்களில் 16.0 வீதத்திற்கும்  அதிகமான கணக்குகளைக் கொண்டுள்ள, நாட்டின் இரண்டாவது பாரிய நிதியியல் சேவை வழங்குனராகும்.

தற்போது, வங்கி நாடு முழுவதும் 742 கிளைகள் மற்றும் சேவை மையங்களைக் கொண்டுள்ளதுடன் மற்றும் 14.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. The Banker Magazine சஞ்சிகை (ஐக்கிய இராச்சியம்), உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாக மக்கள் வங்கியை அடையாளம் கண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Daraz ஊடாக கிடைக்கும் பொருளாதார சுதந்திரம்

2023-02-04 10:41:45
news-image

OPPO A Series அணிவகுப்பின் புதிய...

2023-02-03 10:59:13
news-image

SLIM Brand Excellence Awards 2022இல்...

2023-02-02 15:16:00
news-image

உதய சூரியனைப்போல் நம்பிக்கையுடைய சனிதா உருவாக்கிய...

2023-02-01 16:08:17
news-image

கொழும்பு கிளப்பின் புதிய தலைவராக முதல்...

2023-01-31 15:05:30
news-image

வரலாற்றில் முதல் முறையாக 3 பில்லியன்...

2023-01-27 15:36:26
news-image

40 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய...

2023-01-26 10:52:26
news-image

இலங்கை குழந்தைகளின் பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை...

2023-01-11 14:45:57
news-image

'Lucky Freedom' (லக்கி ப்ரீடம்) புதிய...

2023-01-06 12:31:42
news-image

மக்கள் வங்கியின் தற்காலிக பிரதம நிறைவேற்று...

2023-01-01 12:15:59
news-image

பாத்பைன்டர் குழுமத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இந்தியாவிலுள்ள...

2022-12-23 15:08:59
news-image

DFCC வங்கி GoodLife X உடன்...

2022-12-22 15:59:53