தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சி பதிவுகள் இடம்பெற்றன.

தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் 6 ஊழியர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இன்றைய சாட்சி பதிவிற்கு அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டார்.