நான் எடுத்த தீர்மானத்தால் இன்றும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளேன் - மைத்திரிபால

Published By: Digital Desk 2

05 Dec, 2022 | 01:43 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

சிறைச்சாலைகளில் உள்ள போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றி இருந்தால் நாட்டில்  இன்று போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் தீவிரமடைந்திருக்காது.

நாட்டின் எதிர்கால நலன் கருதி மரண தண்டனையை அமுல்படுத்த எடுத்த தீர்மானத்தினால்  இன்றும் நான்  நெருக்கடிக்குள்ளாகியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் திங்கட்கிழமை (டிச.05) பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றபோது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 

நல்லாட்சியில் எனது பணிக்குழாமின் செயற்பாடுகளுக்கு அதிக நிதி செலவிடப்பட்டுள்ளதாக பிரதான  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இந்த செய்தியின் விரிவாக்கம் முழுமையாக குறிப்பிடப்படவில்லை. எனது ஆட்சியில் தேசிய மட்ட  7 செயற்திட்டங்களை குழுக்களை நியமித்தேன். தேசிய போதைப்பொருள் செயலணி அக்காலக்கட்டத்தில் சிறந்த முறையில் செயற்பட்டது. 

நீதிமன்றத்தினால் மரண தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் இருந்த வண்ணம் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்படும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனையை செயற்படுத்த தீர்மானித்தேன்.

மரண தண்டணையை நிறைவேற்ற எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஒருதரப்பினர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்தார்கள்.

மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானம் செயற்படுத்தப்பட்டிருந்தால் நாட்டில் இன்று போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை இந்தளவிற்கு தீவிரமடைந்திருக்காது.

அத்துடன் தேசிய நீரழிவு தடுப்பு செயற்திட்டம், ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா செயற்திட்டம், பிள்ளைகளை பாதுகாக்கும் திட்டம், கிராம சக்தி செயற்திட்டம் உள்ளிட்ட திட்டங்கள்  செயற்படுத்தப்பட்டன.

இந்த திட்டங்களுக்கு துறைசார் நிபுணர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவ்விடயம் குறித்த செய்தியில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ள நிறுவனங்கள் குறித்த செய்தியை திருத்தம் செய்ய  அறிவுறுத்துமாறு சபாநாயகரிடம் வலியுறுத்த விரும்புகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02
news-image

புத்தாண்டு காலத்தில் பயணப் புகைப்படங்களை உடனடியாக...

2026-04-12 17:48:03
news-image

ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவராக...

2026-04-12 15:40:52