சனி மைந்தன் மாந்தியின் அருளை பெறுவதற்கான வழிபாடு

Published By: Nanthini

05 Dec, 2022 | 01:10 PM
image

(சுபயோக தாசன்)

ம்முடைய ஜாதக கட்டத்தில் 12 ராசிக்கட்டங்கள் உள்ளன. அதில் நவகிரகங்கள் தனித்தோ, இணைவு பெற்றோ அமைந்திருக்கும். 

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான திசா புத்தி ஏற்றதாக இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு வெற்றி முழுமையாக கிடைப்பதில்லை. இதன் பின்னணி அவர்களுக்கு சனி பகவானின் மைந்தனும், சனி கிரகத்தின் உப கிரகமுமான மாந்தியின் அருள் பரிபூரணமாக கிடைக்காதது தான் காரணம்.  

மாந்தி என்பது யார், அதற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கவேண்டும், அவர் என்னென்ன பலன்களை அளிப்பார் என்பதை பற்றி தொடர்ந்து காண்போம். 

மாந்தி உங்களுடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறாரோ.. அதை பொருத்து உங்களுக்கான பலன்கள் முழுமையாகவோ அல்லது மத்திமமாகவோ அல்லது குறைவாகவோ கிடைக்கக்கூடும். 

கேந்திர ஸ்தானம் எனப்படும் 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் மாந்தி இருந்தால், நீங்கள் கடந்த ஜென்மங்களில் செய்த பாவங்களையும், இந்த ஜென்மத்தில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களுக்கான தண்டனையை ஏதேனும் ஒரு ரூபத்தில் அனுபவிக்க செய்வார். 

குறிப்பாக, கேந்திரத்தில் மாந்தி அமையப் பெற்றவர்களுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி என சனியின் பாதிப்பு இருக்கும் காலங்களில், அவர் தண்டனையை வழங்குவார். 

இந்த தண்டனை உங்களின் கர்மாவை கணக்கு தீர்ப்பதற்காகத்தான் அளிக்கப்படுகிறது என்பதனை நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாந்தி 2,5,8,11 ஆகிய இடங்களில் இருந்தால், இந்த ஜென்மத்தில் இவர்கள் செய்யும் பாவங்களுக்கும் புண்ணியங்களுக்கும் ஏற்ப, அடுத்த பிறவியில் அவர்களுக்கு தண்டனையும் சுப பலன்களும் கிடைக்கும்.

மாந்தி உங்களது லக்னத்தில் இருந்தால், உங்களுக்கு மறைமுக உடல் நோய்களை அளிப்பார். 

குறிப்பாக, உடல்வாகு... குண்டாக இருத்தல், அதாவது உடல் பருமன் கொண்டவர்களாக மாற்றிவிடும். வேறு சிலருக்கு பொதுவெளிகளில் தன்னிலையை மறந்து பேச வைத்து, அதன் மூலம் சங்கடங்களையும் அசௌகரியங்களையும் வழங்குவார். அத்துடன் மனதில் தீராத கவலையையும் அளிப்பார்.

லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் மாந்தி இருந்தால், அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் மன நிறைவு, முழு திருப்தி என்பது ஒருபோதும் ஏற்படாது. வீண்செலவு செய்ய வைப்பார். கண் சார்ந்த பாதிப்பையும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களையும் ஏற்படுத்துவார்.

லக்னத்துக்கு மூன்றாமிடத்தில் மாந்தி இருந்தால், நல்ல பலன்களையே வழங்குவார். இவர்களது பேச்சு அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். இவர்களிடத்தில் துணிச்சலும் இணைவதால், தலைமை பொறுப்பினை ஏற்றுக்கொண்டு வெற்றி பெறுவார்கள்.

லக்னத்துக்கு நான்காமிடத்தில் மாந்தி இருந்தால், ஆரோக்கிய குறைவு அடிக்கடி ஏற்படும். நான்காமிடம் சுகஸ்தானம் என்பதால் உடலில் ஒவ்வொரு உறுப்புகளிலும் அல்லது பாதகமான கிரகங்களின் உறுப்புகளிலும் குறைபாடுகள், தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். 

நான்காமிடம் வீடு, மனை ஆகியவற்றை குறிப்பதால், இதனை பெறுவதில் தடைகளை ஏற்படுத்தும். நான்காமிடம் என்பது தாயை குறிப்பதால் தாயுடனான உறவு குறைவாகவே இருக்கும். 

லக்னத்துக்கு ஐந்தாமிடத்தில் மாந்தி இருந்தால், புத்திர தோஷம் உண்டாகும். 12 - 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் அகால மரணத்தை ஏற்படுத்தலாம். வேறு சில சிறார்களுக்கு மன நோய் ஏற்படக்கூடும் அல்லது காரணமின்றி பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள். 

வரவும் செலவும் சரியாக இருந்தாலும், செல்வாக்கில் பங்கம் ஏற்படும். இவர்களுக்கு கஷ்டம் வந்தாலும், இறை நம்பிக்கை குறைந்தவர்களாகவும் இறைபக்தியில் சந்தேகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அத்துடன் தகாத உறவு, சட்ட விரோதமான உறவு ஏற்படக்கூடும். 

லக்னத்துக்கு ஆறாமிடத்தில் மாந்தி இருந்தால், முகம் தெரியாதவர்களுக்கும் உதவி புரியும் நல்லெண்ணம் உண்டாகும். நீண்ட ஆயுளுடன் சமூக செயற்பாட்டாளராக பணியாற்றுவார்கள். 

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது துணிச்சலாக புகாரளித்து, உரிய நடவடிக்கை எடுப்பார்கள். 

வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெறுபவர்களுக்கு ஆறாமிடத்தில் மாந்தி இருக்கும்.

லக்னத்துக்கு ஏழாமிடத்தில் மாந்தி இருந்தால், இல்லற வாழ்க்கையில் பரிபூரண திருப்தி இல்லாமல் இருப்பார்கள். 

ஏழாமிடம் களத்திர ஸ்தானம் என்பதால் திருமண உறவில் எதிர்பார்த்த திருப்தி கிடைக்காது. இவர்களுக்கு நல்ல நோக்கம் கொண்ட நட்பும் அமைவதில்லை. இவர்களாலும் சிறந்த நட்பை பேண முடிவதில்லை. 

மனைவி வழியாக கிடைக்கும் சொத்துக்களை கரைப்பதில் வல்லவர்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்காக எவரை நம்பிக்கொண்டிருக்கிறார்களோ, அவர்களால் இவர்களுக்கு எந்த பலனும் கிட்டாது. ஏமாற்றமடைவார்கள்.

லக்னத்துக்கு எட்டாமிடத்தில் மாந்தி இருந்தால், பசி அதிகமிருக்கும். இதனால் அகால வேளைகளிலும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு உடலில் பல்வேறு கோளாறுகள் உண்டாகும். முழுமையான நம்பிக்கையுடன் தொழிலில் ஈடுபடாமல், சந்தேகத்துடனோ அல்லது எதிர்நிலை சிந்தனையுடனோ தொழிலை அணுகுவதால், இவர்களுக்கு தோல்விதான் தொடர்ந்து கிடைக்கும்.

லக்னத்துக்கு ஒன்பதாமிடத்தில் மாந்தி இருந்தால், தந்தை /-மகன் உறவு பாதிக்கும். தவறான பாதையில் பயணிப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கும். பெண்களுடன் தகாத உறவு ஏற்படக்கூடும். பொருளாதார சிக்கலும் உண்டாகும்.

லக்னத்துக்கு பத்தாமிடத்தில் மாந்தி இருந்தால், வரவும் செலவும் சமமாக இருக்கும். நன்மையும் தீமையும் கலந்தேயிருக்கும். இவர்கள் புத்திசாலித்தனம் மிக்கவர்களாக இருந்தாலும், சற்று சுயநலம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். 

வாழ்க்கையை திட்டமிட்டு மெதுவாக முன்னேற்றிக்கொண்டு செல்வார்கள்.

லக்னத்துக்கு 11ஆம் இடத்தில் மாந்தி இருந்தால், லாபம் அதிகம். செல்வம், செல்வாக்கு உயரும். புகழ், குணமான மனைவி, சுற்றி உள்ளவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை, ஆன்மிக சிந்தனை பெருகும். இவர்களின் பாத அமைப்பு வித்தியாசமாக இருக்கும்.

லக்னத்துக்கு 12ஆம் இடத்தில் மாந்தி இருந்தால், வீண்செலவை அதிகம் செய்வார்கள். சிற்றின்ப பிரியர்கள். இல்லற வாழ்க்கையில் பாரிய திருப்தியை அடையாதவர்கள். சோம்பேறிகளாக இருப்பார்கள்.

மாந்தியின் கெடுபலன்கள் குறைக்க சுதர்சன யாகம் மற்றும் மிருத்யுஞ்சய யாகம் செய்யலாம். இந்த யாகத்தை செய்ய இயலாதவர்கள், அருகில் இந்த யாகங்கள் நடைபெற்றாலோ அல்லது பங்குபற்றினாலோ கெடுபலன்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

மேலே குறிப்பிட்ட பலன்கள் பொதுவானவை. மாந்தி லக்னத்துக்கு எந்த இடத்தில் இருந்தாலும், அவருடன் சுப கிரகங்கள் இருந்தாலோ அல்லது சுப கிரகங்களின் பார்வை இருந்தாலோ அல்லது பலனளிக்கும் திசா நாதனின் பார்வை இருந்தாலோ, பலன்கள் மாறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

மாந்தி, உங்களது வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்தால், அந்தத் தடையை அகற்ற தமிழகத்தில் உள்ள திருவாலங்காடு எனும் இடத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் பத்ரகாளி அம்மனை வழிபட வேண்டும். 

சிலர் குரு மற்றும் ஜோதிட வழிகாட்டிகளின் அறிவுரையின்படி மாந்தீஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17
news-image

ஆகமி கிரகத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-01-06 16:36:08
news-image

சொந்த வீட்டு கனவை நனவாக்கும் சூட்சம...

2025-01-05 17:49:20
news-image

நாம் அனைவரும் சாதிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-01-03 16:55:59
news-image

சனியின் தாக்கத்தை குறைக்கும் எள்ளுருண்டை !

2024-12-31 15:15:31
news-image

2025 ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி...

2024-12-30 17:51:14