துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சோ ராமசாமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.40 மணிக்கு  உயிரிழந்ததாக  அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிறந்த அரசியல் விமர்சகராக சோ, தான் நடத்தி வந்த துக்ளக் பத்திரிக்கையிலும் நாடகங்களிலும் அரசியல் விமர்சனம் செய்தது பெரிதும் புகழ் பெற்றுள்ளார். இதே போல் தமிழ் சினிமாவில் 200 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோருடன் நடித்துள்ளார். 4 படங்களை இயக்கியுள்ளார்.தனது நடிப்பு மற்றும் இயக்கம் மூலம் பெரும் தடம் பதித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.