முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் "சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்" என கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் பெயரையும் குறிப்பிடாமலேயே இதை அவர் பதிவேற்றம் செய்துள்ளதால் சிலர் கமல் செயலை கண்டித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

சிலர் கமல் பாணியில் அவர் கருத்து கூறியுள்ளார் என்போரும் உண்டு.

கமல் மற்றும் ஜெயலலிதா நடுவே இணக்கமில்லை என்ற கருத்து கமலின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதித்தபோது எழுந்தது. ஆனால் பிறகு ஜெயா தொலைகாட்சியில் நடுவராக கமல் வீற்றிருந்தார். 

ஆனால், கடந்த ஆண்டு சென்னையை வெள்ளம் பாதித்தபோது ஆங்கில ஊடகங்களுக்கு கமல் அளித்த பேட்டி ஆட்சியாளர்களை கோபத்தில் தள்ளியது.

அப்போதைய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கமலை கண்டித்து பெரிய அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார் என்பது நினைவிருக்கின்றது.