மியன்மாரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு அந் நாட்டு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
வங்கியில் துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்களுக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நியாயமான விசாரணையின் அடிப்படை கோட்பாடுகளை மீறியும், சுதந்திரம் மற்றும் பாரபட்சமின்மைக்கான முக்கிய நீதித்துறை உத்தரவாதங்களுக்கு முரணான வகையிலும் இராணுவம் ரகசிய நீதிமன்றங்கள் நடவடிக்கைகளை தொடர்கிறது.
மாணவர்களுக்கு மரண தண்டனை விதித்திருப்பது இராணுவத்தின் பழிவாங்கும் செயலாகும். 7 மாணவர்கள் தவிர்த்து 4 இளைஞர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களுடன் சேர்த்து இதுவரை 139 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
மியன்மாரில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து 100-க்கும் மேற்பட்டோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இராணுவ ஆட்சிக்கு எதிரானவர்களை ஒடுக்குவதற்கு மரண தண்டனையை ஒரு ஆயுதமாக மியன்மார் இராணுவம் பயன்படுத்துவதாக ஐ.நா. குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM