(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய மீனவர்களுக்காக எத்தனை கடிதம் எழுதியிருப்பார். ஆனால் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் வட மீனவர்களுக்காக ஒரு கடிதமாவது எழுதியுள்ளரா? என ஜே.வி.பி. எம்.பி. விஜித்த ஹேரத் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் அத்துமீறும் இந்திய படகுகளுக்கு துப்பாக்கி சூடு நடத்துவதாக கூறிய பிரதமர் என்ன செய்கிறார்? இவர்கள் இருவரும் இந்தியாவிற்கு அடிமைப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு–செலவுத் திட்டத்தின் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் செலவினத் தலைப்பிலான  குழு நிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.