மட்டக்களப்பு, கொக்குவில் பகுதியில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை வீடியோ மூலம் பதிவு செய்த குற்றத்தில் மூவர் இன்று (டிச. 4) ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் 16 வயது சிறுமியை, அதே வகுப்பில் கற்கும் சிறுவன் 2 மாதங்களுக்கு முன்னர், தனது வீட்டில் யாரும் இல்லாதபோது அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அப்போது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படும் காட்சியை சிறுவனின் நண்பர்கள் 3 பேர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த சிறுவனின் நண்பர்கள் சிறுமியை தொடர்புகொண்டு, வீடியோ பதிவை பற்றி கூறி, தங்களுடனும் உறவுகொள்ள அழைத்து மிரட்டியுள்ளனர்.
தங்கள் விருப்பத்துக்கு இணங்காவிட்டால், வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பப்போவதாக சிறுமியை தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் விடயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் மற்றும் அவனது 16 வயது நண்பர்கள் உட்பட 3 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அந்த நண்பர்களில் சம்பவத்தோடு தொடர்புடைய மற்றுமொருவர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ள 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM