எலிகளை பிடிப்பதற்கு 6 கோடி ரூபா சம்பளம் ! எங்கு தெரியுமா?

By Digital Desk 2

05 Dec, 2022 | 09:41 AM
image

அமெரிக்காவின் முக்கியமான நகரமான நியூயோர்க்கில் பல ஆண்டுகளாக எலிகளின் தொல்லையால் மக்கள் போராடி வரும் நிலையில், எலியை பிடித்துக் கொடுப்பவர்களுக்க 170,000 டொலர்கள் சம்பளம் (இலங்கை ரூபாவில் சுமார் 6.36 கோடி) வழங்கப்படும் என நகர மேயர் எரிக் ஆடம்ஸ் விளம்பரம் செய்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக நியூயார்க்கில் எலித் தொல்லை 70 சதவீதம் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், மக்களிடம் இருந்து நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான எலித் தொல்லை புகார்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், எலிகளின் தொல்லையை தீர்க்க எவரும் முன்வந்தால் பெரும் தொகையை கொடுக்க தயாராக இருப்பதாக நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்திருக்கிறார்.

அத்துடன் கொறித்திண்ணிகளான எலிகளை ஒரேடியாக அகற்ற ஒரு வேலைவாய்ப்பையே நியூயோர்க் நகர நிர்வாகம் ஏற்படுத்தியிருக்கிறது. 

இதற்கான விளம்பரங்கள் அமெரிக்காவின் பல்வேறு செய்தித் தாள்கள் மூலம் பிரசுரிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, எலிகளை அழிக்க எவர் முன்வந்தாலும் பெரும் தொகையை கொடுக்க தயாராக இருப்பதாகவும், அவைகளின் எண்ணிக்கையை அடக்க முறையான திட்ட மேலாண்மை, நகர்ப்புற திட்டமிடல் திறன் கொண்டவர் மற்றும் கொலையாளிக்கான உணர்வோடு இருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என மேயர் எரிக் ஆடம்ஸ் விளம்பரம் செய்துள்ளார்.

எலிகளின் அச்சுறுத்தல்களை தடுக்க புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் இரவு 8 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு மேல் குப்பைகளை வீடுகளுக்கு வெளியே கொட்டும்படி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இருப்பினும் நியூயோர்க்கை சுற்றி எலிகள் எதிர்த்து போராடுவது சவாலாக இருப்பதால், இந்த புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆகவே எலிகளை கொல்வதற்கான தேவையான உந்துதல் மற்றும் கொலையாளி உள்ளுணர்வு ஒருவருக்கு இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்வதில் வெற்றிபெறும் எவருக்கும் $170,000 வரை அதாவது இலங்கை ரூபாவில் சுமார் 6.36 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் மேயர் எரிக் அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரீட்சை மண்டபத்தில் 500 மாணவிகளுக்கு மத்தியில்...

2023-02-02 15:39:46
news-image

நிச்சயதார்த்தத்தின்பின் திருமணம் செய்ய மறுத்த பெண்...

2023-02-02 13:52:05
news-image

அதிவேக ரயிலில் குழந்தை பிரசவித்த பயணி:...

2023-01-30 17:18:40
news-image

370 கிலோ காரை தனது உடலால்...

2023-01-30 09:44:33
news-image

15 வயது சிறுமியாக நடித்து, பாடசாலை...

2023-01-27 10:04:10
news-image

அபுதாபி அரச குடும்ப ஊழியராக காட்டிக்கொண்ட...

2023-01-17 16:24:01
news-image

ஒரு நபரால் உருவாகிய 71 குழந்தைகள்

2023-01-13 15:35:42
news-image

புது வருடம் - பயோடேட்டா

2023-01-09 14:01:43
news-image

வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டை குழந்தைகள்...

2023-01-07 14:50:22
news-image

சீன ஆற்றில் ஐஸ் பூக்கள்

2023-01-02 14:14:14
news-image

ஆபத்தான வகையில் மோட்டார் சைக்களில் பயணித்த...

2022-12-30 13:07:47
news-image

102 பிள்ளைகளுக்கு தந்தையான பின் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு...

2022-12-27 13:17:42