வவுனியா மெனிக்பாம் பகுதியில் உள்ள புகையிரத கடவையினை கடக்க முயன்ற குடும்பஸ்தர் இன்றைய தினம் (டிச. 4) காலை 7.30 மணியளவில் புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
செட்டிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து விவசாய காணியினை பார்வையிடுவதற்காக மெனிக்பாம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது குறித்த பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட நிலையில், மன்னாரிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டு படுகாயமடைந்திருந்தார்.
காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின்போது உயிரிழந்தவர் செட்டிகுளம் துடரிக்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மோகனதாஸ் என்ற 55 வயதுடைய குடும்பஸ்தரே ஆவார்.
இச்சம்பவம் தொடர்பாக பறையணாலங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM