(எம்.வை.எம்.சியாம்)
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 6 பேர் சனிக்கிழமை (டிச.03) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சிப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் போது கூரிய ஆயுதத்தால் சிலரை தாக்கி வீடு மற்றும் உடமைகளுக்கு சேதம் விளைவித்தமை, பணம் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்றமை மற்றும் வாகனங்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றங்களுடன் தொடர்புடைய 6 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 21, 24, 29 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் அக்கராயன்குளம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டுள்ளார்கள்.
கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM