காலநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் எண்ணற்ற பாரை மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.
அப்பகுதி கடற்கரைகளில் கடந்த சில வாரங்களாக இலட்சக்கணக்கில் பாரை மீன்கள், வளையா மீன்கள், சுறா மீன்கள் கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு, அவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதேபோன்று இன்றைய தினமும் மருதமுனை, சாய்ந்தமருது, கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவில் கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ள பாரை மீன்களில் ஒரு மீனின் பெறுமதி சுமார் 1500 - 1800 ரூபா என விலை நிர்ணயிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மீன்கள் விற்கப்படுகின்றன.
இதேவேளை மலிவான விலையில் கிளவால், வளையா மீன்களும் விற்கப்படுகின்றன. அதன்படி 1 கிலோ வளையா மீன் 400 ருபாவாகவும், 1 கிலோ கிளவால் மீன் 600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
அத்துடன் இவ்வாறு கரைவலைகள் மூலம் மீன்களை பிடித்து விற்கும் ஒரு மீனவரின் ஒரு நாள் வருமானம் 10 - 20 இலட்சங்களாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
தற்போது மருதமுனை, கல்முனை கடற்கரை பகுதிகளில் கரைவலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் முதலான மீன்பிடி முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM