அனல் வலு வினைத்திறன் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் துறையில் முன்னோடியாக திகழும் நிறுவனமான Maxtherm Lanka (Pvt) Ltd, இலங்கை தேசிய வலு வினைத்திறன் விருதுகள் 2016 ல் பெருமைக்குரிய தங்க விருதை தனதாக்கியிருந்தது.

வலுப்பாவனையை குறைப்பதற்கான வலு முகாமைத்துவ செயற்பாடுகளின் பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை நிலைபேறான வலு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றலுடன் நவம்பர் 24 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Maxtherm Lanka (Pvt) Ltd இன் தொழில்நுட்ப பணிப்பாளர்ரூபவ் பொறியியலாளர் கயா சிறிவர்தன துறையில் பெருமளவு அனுபவம் பெற்றவராக திகழ்கிறார். இவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாம் தொடர்ச்சியாக வழங்கி வரும் வலுச்சேமிப்பு செயற்பாடுகள் மற்றும் அதில் கொண்டுள்ள அனுபவம் ஆகியவற்றுக்காக நாம் கௌரவிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்வரும் காலங்களில் மாபெரும் செயற்திட்டங்களில் பிரவேசிக்க நாம் திட்டமிட்டுள்ளோம் அதனூடாக சந்தையில் மிகவும் உயர்ந்த நிலையை எம்மால் எய்தக்கூடியதாக இருக்கும்” என்றார்.

இந்த விருதை இதற்கு முன்னரும் இந்நிறுவனம் வென்றுள்ளதுடன் 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் வெண்கல விருதுகளை தனதாக்கியிருந்தது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்துள்ள பொறியியலாளர் சிறிவர்தன, Maxtherm Lanka நிறுவனத்தின் வெற்றிகரமான இயக்கத்தில் முக்கிய பங்கை வகிக்கிறார்.

இவர் இலங்கை பொறியியலாளர்கள் சம்மேளனம் மற்றும் இலங்கை உயிரியல் வலு சம்மேளனத்தின் அங்கத்தவர் என்பதுடன் SLSEA ன் தகைமை வாய்ந்த ஆலோசகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 5.4 மில்லியன் லீற்றர் எரிபொருள் மற்றும் 0.23 மில்லியன் லீற்றர் டீசல் ஆகியவற்றுக்கு பதிலாக மாற்றீட்டு வலுக்களை வழங்கி நாட்டுக்கு மொத்தமாக 464 மில்லியன் ரூபாயை சேமிக்க நிறுவனம் கடந்த ஆண்டில் பங்களிப்பை வழங்கியிருந்தது. 217,000 அலகுகள் மின்சார வலுவை சேமிக்கவும் 14700 டொன்கள் காபனீரொட்சைட் வெளியீட்டை தவிர்க்கவும் பங்களிப்பு வழங்கியிருந்தது.

நாட்டில் பல நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. வலு முகாமைத்துவம் தொடர்பில் பயிற்சிகளை முன்னெடுத்திருந்ததுடன் ஊழியர் மற்றும் நிறுவன அபிவிருத்தி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது சொந்த வலு அளவீட்டு சாதனங்கள் கொண்டு வெவ்வேறு ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை பயிற்சிப்பட்டறைகள் மற்றும் உற்பத்தி பகுதிகளில் இலங்கையிலும் இந்தியாவிலும் முன்னெடுத்திருந்தது.

இந்நிறுவனத்தின் மாபெரும் வாடிக்கையாளர்களில் MAS ஹோல்டிங்ஸ், CIC ஹோல்டிங்ஸ் DSI, ஓஷியன் லங்கா, ரிச்சர்ட் பீரிஸ் ஹைட்ராமணி குழுமம் ஏசியா பசுபிக் பிரெவரி லங்கா ஆகியன அடங்கியுள்ளன.

Maxtherm Lanka (Pvt) Ltd இலங்கையில் உயிர்பொருள் எரியூட்டிய வெப்பமாக்கிகள் விநியோகம் மற்றும் பொருத்துகை ஆகியவற்றில் முன்னோடியாக திகழ்கிறது. துறையில் அனல் வலு வினைத்திறனை மேம்படுத்துவது இதன் இலக்காக அமைந்துள்ளது. வலு மற்றும் சூழல் சார்ந்த பொறியியலில் பல்வேறு பரந்த சேவைகளையும் வழங்கி வருகிறது.

Maxtherm India வின் உத்தியோகபூர்வ முகவராக இந்நிறுவனம் திகழ்கிறது steam boilers, thermic fluid heaters, hot water generators, air pollution control equipments மற்றும் heat recovery units ஆகியவற்றை விநியோகித்து பொருத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் முன்னோடியாக திகழ்கிறது. Maxtherm Lanka வினால் அதன் தாய் நிறுவனத்துடன் இணைந்து மாறிவரும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பொருத்தமான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் வகையில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.